ஆர்.கே. நகரில் கண்காணிப்பு பணிக்காகத் துணை ராணுவம் குவிப்பு: பணப்பட்டுவாடாவை தடுக்கப் பறக்கும் படை

டிசம்பர் 12

ஆர்.கே.நகர் தொகுதியில் 108 துணை ராணுவ படையினர் சோதனை சாவடிகளில் கண்காணித்து வருகின்றனர். மேலும், பணப்பட்டுவாடாவைத் தடுக்க 18 பறக்கும் படையினர் தீவிர வேட்டையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவால் காலியானதாக அறிவிக்கப்பட்ட ஆர்.கே.நகர் தொகுதிக்கு 8 மாதங்களுக்குப் பிறகு வருகிற 21-ந்தேதி இடைத்தேர்தல் நடத்தப்படுகிறது. அதிமுக சார்பில் மதுசூதனன், திமுக வேட்பாளராக மருது கணேஷ், பாஜக சார்பில் கரு.நாகராஜன், நாம் தமிழர் கட்சி வேட்பாளராக கலைக்கோட்டுதயம் ஆகியோர் போட்டியிடுகின்றனர். 

அதிமுகவில் இருந்து ஓரம் கட்டப்பட்ட தினகரன், சுயேட்சை வேட்பாளராகக் களம் இறங்கி உள்ளார். இதனால், ஆர்.கே.நகர் தேர்தலுக்கான பிரச்சாரம் களை கட்டியுள்ளது. அனைத்துக் கட்சி தலைவர்களும், வாக்காளர்களைச் சந்தித்து வாக்கு சேகரித்து வருகின்றனர்.  அதிமுக,  திமுக ஆகிய கட்சிகளுக்கு இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ள நிலையில், இந்த 2 கட்சிகளுக்கும் தினகரன் கடும் சவாலாக இருப்பார் என்றும் கூறப்படுகிறது.

ஆர்.கே.நகரில் தேர்தல் களம் சூடு பிடித்துள்ள நிலையில், மீண்டும் பணப்பட்டுவாடா புகாரும் பூதாகரமாக எழுந்துள்ளது. கடந்த முறை பண மழை பொழிந்தது போலவே, இந்தத் தேர்தலிலும் பணப்பட்டு வாடா நடந்து விடக்கூடாது என்பதால் தேர்தல் ஆணையம் தீவிரமாக களம் இறங்கியது. ஆனால், அதையெல்லாம் மீறி அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்கள் பல வழிகளில் பணப்பட்டு வாடா செய்து வருவதாகக் கூறப்படுகிறது. ஆர்.கே.நகர் தொகுதியில் வீடு வீடாகப் பல குழுக்களாகப் பிரிந்து வாக்காளர்களின் பெயர் விவரங்களைச் சேகரித்து பின்னர் வெளியிடங்களுக்கு வரவழைத்து பணப்பட்டுவாடா செய்யப்பட்டு வருவதாகப் பரவலாக பேசப்படுகிறது.

இதற்காகப் படித்த பெண்கள் பணிக்கு அமர்த்தப்பட்டுள்ளதாகவும், பணப்பட்டுவாடாவை கச்சிதமாக செய்யும் பெண்களுக்கு கமி‌ஷன் வழங்கப்படுவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனைத் தொடர்ந்து தேர்தல் அதிகாரிகளும் போலீசாரும் பணப்பட்டு வாடாவை தடுக்கக் கூட்டாக களம் இறங்கி உள்ளனர். தொகுதி முழுவதும் பணப்பட்டு வாடாவை தடுக்க 18 பறக்கும் படையினர் தீவிர வேட்டையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மொத்தம் 18 பறக்கும் படையினர் பம்பரமாகச் சுழன்று வருகின்றனர். 

வீடியோ கேமராவுடன் சுற்றி வரும் இந்தப் பறக்கும் படையினர் வாகனங்களில் பணம், பரிசுப் பொருட்கள் கொண்டு செல்லப்படுகிறதா? என்பது பற்றி தீவிரமாகச் சோதனை நடத்தி வருகிறார்கள். இந்தப் பறக்கும் படையில் போலீசாருடன் துணை ராணுவ படையினரும் இடம் பெற்றுள்ளனர். 

பணப்பட்டுவாடா மற்றும் தேர்தல் விதிமீறல்களைத் தடுப்பதற்காக 12 இடங்களில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இங்கு, 24 மணி நேரமும் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு இடத்திலும் தலா 3 துணை ராணுவ படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். நேற்று இரவு 12 மணியில் இருந்து இவர்கள் பாதுகாப்பு பணியை மேற்கொண்டு வருகிறார்கள். மொத்தம் 108 துணை ராணுவ படையினர் சோதனை சாவடிகளில் கண்காணித்து வருகின்றனர். இவர்கள் தவிர போலீசாரும் பல்வேறு பிரிவுகளாகப் பிரிந்து ரோந்து சுற்றி வருகிறார்கள்.

சென்னை மாநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவின் பேரில், வடசென்னை கூடுதல் ஆணையர் ஜெயராம் தலைமையிலான போலீசார் 24 மணி நேரமும் கார், வேன் மற்றும் மோட்டார் சைக்கிள்களில் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.  36 நான்கு சக்கர வாகனங்களும், 25 மோட்டார் சைக்கிள்களும் ரோந்து பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. அனுமதியின்றி தொகுதிக்குள் நுழைந்த 52 கார்கள் பறிமுதல் செய்யப்பட்டு தண்டையார்பேட்டை அரசு பாலிடெக்னிக் வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

இந்த எண்ணிக்கை வரும் நாட்களில் மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தல் முடிந்த பின்னரே பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் விடுவிக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். ஆர்.கே.நகர் தொகுதியை பொறுத்தவரையில் மொத்தம் உள்ள 252 வாக்குச்சாவடிகளுமே பதட்டமானவை என்று அறிவிக்கப்பட்டுள்ளதால் பாதுகாப்பு ஏற்பாடுகளும், கண்காணிப்பு பணிகளும் பல மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளன.

Newsletter

Left Parties Stage Demonstration in Coimbatore Urging Rollback of Fuel and Commercial LPG Price Hike..!

Demanding an immediate rollback of the hike in petrol, diesel and commercial LPG cylinder prices, the CPI(M), CPI and CP...

பெட்ரோல், டீசல், சிலிண்டர் விலை உயர்வை திரும்பப் பெற கோரி கோவையில் இடதுசாரி கட்சிகள் ஆர்ப்பாட்டம்..!

பெட்ரோல், டீசல் மற்றும் வணிக பயன்பாட்டிற்கான எரிவாயு சிலிண்டர் விலை உயர்வை திரும்பப் பெற வலியுறுத்தி, கோவையில் மார்க்சிஸ...

புதிய தமிழக அரசுக்கு வாழ்த்து தெரிவித்த கோவை மண்டல திருக்கோவில்கள் பரம்பரை அறங்காவலர்கள் சங்கம்..!

புதியதாக பொறுப்பேற்றுள்ள தமிழக முதல்வர் ஜோசப் விஜய் தலைமையிலான அரசுக்கு கோவை மண்டல திருக்கோவில்கள் பரம்பரை அறங்காவலர்கள்...

SSLC தேர்வு முடிவுகள் 2026: கொங்கு மண்டலத்தில் 97.09 சதவீதம் தேர்ச்சி விகிதத்துடன் கோவை முதலிடம்..!

தமிழகத்தில் நடைபெற்ற 2026 எஸ்.எஸ்.எல்.சி பொதுத்தேர்வு முடிவுகளில் புதுக்கோட்டை, சிவகங்கை, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்கள் மாந...

கோவையில் 1,500-க்கும் மேற்பட்ட மருந்தகங்கள் அடைப்பு; பொதுமக்கள் அவதி..!

ஆன்லைன் மருந்து விற்பனைக்கு தடை விதிக்க வேண்டும், கார்ப்பரேட் நிறுவனங்களின் தள்ளுபடி விற்பனையை கட்டுப்படுத்த வேண்டும் உள...

மீண்டும் இ-மெயில் மூலம் கலெக்டர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்..! – மர்ம நபரை பிடிக்க போலீசார் தீவிரம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மீண்டும் இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்ததை தொடர்ந்து, மெட்டல் டிடெக்டர் கருவ...