திருப்பூர், டிசம்பர் 11
திருப்பூரில் பருவ மழை இந்த ஆண்டு வழக்கத்தை விட கொட்டி தீர்த்தது. இதனிடையே இன்று காலை திருப்பூர் மாவட்டம் பல்லடம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பனிப்பொழிவு காணப்பட்டது.
கோவை-திருச்சி தேசிய நெடுஞ்சாலை மற்றும் தாராபுரம் சாலை, திருப்பூர் சாலையில் கடும் பனிப்பொழிவு காரணமாக வாகன ஓட்டிகள் வாகனங்களை இயக்குவதற்கு சிரமப்பட்டனர்.
சாலை சரிவர தெரியாததால் முகப்பு விளக்குகளை ஒளிர விட்டபடி சென்றனர். மேலும் கடும் பனிப்பொழிவினால் எதிரே வரும் வாகனங்கள் தெரியவில்லை.
நெடுஞ்சாலைகளில் கடும் பனிப்பொழிவு காரணமாக விபத்துக்கள் ஏற்பட வாய்ப்புள்ளதால் காவல்துறையினர் காலை வேளைகளில் நெடுஞ்சாலையில் பாதுகாப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.