கோவை, டிசம்பர் 11
கோவையில் பைக் மீது லாரி மோதிய விபத்தில் கல்லூரி மாணவர்கள் இருவர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
வேலாண்டிபாளையம் பகுதியை சேர்ந்தவர் முகம்மது யாசர் அர்பத் (19), இவர் சரவணம்பட்டி பகுதியில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் பி.எஸ்.சி இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார்.
வேலாண்டிபாளையம் பகுதியை சேர்ந்தவஎ வெள்ளிங்கிரி (17). தனியார் பள்ளி ஒன்றில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். இவர்கள் இருவரும் போத்தனூரில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சிக்கு சென்றுவிட்டு நேற்று அதிகாலை இரு சக்கர வாகனம் மூலம் வீடு திரும்பினர்.
இவர்களது வாகனம் வடகோவையை அடுத்த பாரதி பார்க் அருகே வந்த போது எதிரே வந்த லாரி மோதியதில் இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
இது தொடர்பாக, போக்குவரத்து புலனாய்வு கிழக்கு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரி ஓட்டுனரான மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த சின்னக்கருப்பன் என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.