கோவையில் தூய்மை இடங்கள் பற்றி தரவரிசைப்பட்டியல் வெளியிடப்படும்

கோவை, டிசம்பர் 8

தேசிய அளவில் ”தூய்மையான நகரங்கள் தரவரிசைப்பட்டியல் ஸ்வச் சர்வெக்ஷான் 2018” குறித்த ஆலோசனைக் கூட்டம் மாநகராட்சி ஆணையர் க. விஜயகார்த்திகேயன் தலைமையில் நடைபெற்றது. டிசம்பர் 15-ம் தேதி ஸ்வச் பாரத் மற்றும் மாநகராட்சி அதிகாரிகளால் குறிப்பிட்ட இடங்களை ஆய்வு செய்து தரவரிசைப்பட்டியல் வெளியிடப்படும் என மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டது

மாநகராட்சியின் பிரதானக் கூட்ட அரங்கில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் ஸ்வச் சர்வெக்ஷான் 2018 - தேசிய அளவிலான தூய்மையான நகரங்கள் பட்டியலில், கோவை மாநகராட்சி சென்ற ஆண்டைவிட மிகச்சிறந்த தரப்பட்டியலில் இடம் பெறுவதற்கு தேவையான அனைத்து தூய்மைப் பணிகள் மேற்கொள்ளுமாறும், தரவரிசைப்பட்டியலுக்கு தேவையான உரிய ஆவணங்களை விரைவில் தயார் செய்ய வேண்டும் என அனைத்து மண்டல உதவி ஆணையாளர்களுக்கும், சுகாதார அலுவலகர்களுக்கும் உத்தரவிடப்பட்டது. 

மேலும், ஸ்வச் சர்வெக்ஷான் 2018-ஐ முன்னிட்டு பள்ளிகள், மருத்துவமனைகள், ஹோட்டல்கள், குடியிருப்பு சங்கங்கள் மற்றும் வழிபாட்டுத் தளங்களில் கடைபிடிக்கப்படும் சுகாதாரப் பணிகள் மற்றும் தூய்மைப் பணிகளை ஆய்வு செய்து மாநகராட்சி அளவில் தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படவுள்ளது. அதனடிப்படையில், சுற்றுப்புறச்சூழல், சுகாதாரம் மற்றும் சுத்தமான கழிப்பறைகள், ஸ்வச் பாரத் குறித்த விழிப்புணர்வு, மக்கும் குப்பை மற்றும் மக்காத குப்பைகளை பிரிப்பது போன்ற அம்சங்களைப் பொருத்து தரவரிசைப்பட்டியல் வெளியிடப்படும். 

ஆகவே, இம்முயற்சியில் பங்குபெற ஆர்வமுள்ள பள்ளிகள், மருத்துவமனைகள், ஹோட்டல்கள், குடியிருப்பு சங்கங்கள் மற்றும் பொதுமக்கள் டிசம்பர் 14-ம் தேதிக்குள் தங்களுடைய வளாகங்களில் கடைபிடிக்கப்படும் தூய்மைப்பணிகள் குறித்த புகைப்படங்கள், வீடியோக்கள் மற்றும் சம்பந்தப்பட்ட நபர்களின் முழுவிவரங்களையும் [email protected] என்ற மின்னஞ்சலில் பதிவு செய்து கொள்ளலாம். இவ்வாறு, பெறப்படும் பதிவுகளைக் கொண்டு டிசம்பர் 15-ம் தேதி ஸ்வச் பாரத் மற்றும் மாநகராட்சி அதிகாரிகளால் குறிப்பிட்ட இடங்களை ஆய்வு செய்து தரவரிசைப்பட்டியல் வெளியிடப்படும் என மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டது. 

Newsletter

Left Parties Stage Demonstration in Coimbatore Urging Rollback of Fuel and Commercial LPG Price Hike..!

Demanding an immediate rollback of the hike in petrol, diesel and commercial LPG cylinder prices, the CPI(M), CPI and CP...

பெட்ரோல், டீசல், சிலிண்டர் விலை உயர்வை திரும்பப் பெற கோரி கோவையில் இடதுசாரி கட்சிகள் ஆர்ப்பாட்டம்..!

பெட்ரோல், டீசல் மற்றும் வணிக பயன்பாட்டிற்கான எரிவாயு சிலிண்டர் விலை உயர்வை திரும்பப் பெற வலியுறுத்தி, கோவையில் மார்க்சிஸ...

புதிய தமிழக அரசுக்கு வாழ்த்து தெரிவித்த கோவை மண்டல திருக்கோவில்கள் பரம்பரை அறங்காவலர்கள் சங்கம்..!

புதியதாக பொறுப்பேற்றுள்ள தமிழக முதல்வர் ஜோசப் விஜய் தலைமையிலான அரசுக்கு கோவை மண்டல திருக்கோவில்கள் பரம்பரை அறங்காவலர்கள்...

SSLC தேர்வு முடிவுகள் 2026: கொங்கு மண்டலத்தில் 97.09 சதவீதம் தேர்ச்சி விகிதத்துடன் கோவை முதலிடம்..!

தமிழகத்தில் நடைபெற்ற 2026 எஸ்.எஸ்.எல்.சி பொதுத்தேர்வு முடிவுகளில் புதுக்கோட்டை, சிவகங்கை, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்கள் மாந...

கோவையில் 1,500-க்கும் மேற்பட்ட மருந்தகங்கள் அடைப்பு; பொதுமக்கள் அவதி..!

ஆன்லைன் மருந்து விற்பனைக்கு தடை விதிக்க வேண்டும், கார்ப்பரேட் நிறுவனங்களின் தள்ளுபடி விற்பனையை கட்டுப்படுத்த வேண்டும் உள...

மீண்டும் இ-மெயில் மூலம் கலெக்டர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்..! – மர்ம நபரை பிடிக்க போலீசார் தீவிரம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மீண்டும் இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்ததை தொடர்ந்து, மெட்டல் டிடெக்டர் கருவ...