கோவை, டிசம்பர் 08
இந்திய விமானப் படையின் சார்பில் மனிதவள மேம்பாடு குறித்தப் பயிற்சிப் பட்டறை நடைபெற்றது.
கோவை மாவட்டம் சூலூர் அருகே இந்திய விமானப்படைத் தளம் அமைந்துள்ளது. அங்கு, கமாண்டர் சூரத்சிங் தலைமையில் விமானப்படையினருக்கான மனிதவள மேம்பாடு குறித்த பயிற்சிப் பட்டறை நடைபெற்றது. இதில், விமானப்படையின் துணை மார்ஷும், மூத்த நிர்வாகப் பொறுப்பாளருமான பி. சந்திரசேகர் பங்கேற்றார்.
இந்தப் பயிற்சிப் பட்டறையில், தெற்கு விமானப் படை கமாண்டர்கள் உள்பட 120-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அப்போது, விமானப்படை வீரர்கள் தங்களை தயார்படுத்திக் கொள்ளுதல், பயிற்சி பெறுதல், வாழ்க்கை முறையை மதிப்பிடுதல், பதவி உயர்வுக்கான வாய்ப்புகளை உருவாக்குதல் மற்றும் பொதுநலன் குறித்து எடுத்துரைக்கப்பட்டது.
இதன்மூலம், இந்திய விமானப்படையின் மனிதவள மேம்பாட்டுக் கொள்கைகளை அறிந்து கொள்ள விமானப்படையினருக்கு ஒரு நல்ல வாய்ப்பாக அமைந்தது.