டிசம்பர் 8
கோவையில் உள்ள மத்திய அரசின் அச்சகத்தைத் தொடர்ந்து நடத்த வேண்டும் என வலியுறுத்தி பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.
இது தொடர்பாக அவர் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது, கோவையில் உள்ள அச்சகத்தை மூடுவதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. மத்திய அரசின் அச்சகத்தைத் தொடர்ந்து நடத்த வேண்டும். மூடும் திட்டத்தை கைவிட வேண்டும். இங்கு, 4 ஆண்டுகளுக்கான பணியாணைகள் உள்ளன. 132.7 ஏக்கரில் உள்ள அச்சகத்தில் திறன்மிக்க பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இதனைத் தொடர்ந்து நடத்துவது சாலச்சிறந்ததாகும். கர்நாடகா, கேரளாவில் உள்ள அச்சகங்களைக் கோவையுடன் இணைக்க வேண்டும். இணைப்பின் மூலம் தென்னிந்தியாவில் ஒரே அரசு அச்சகமாகக் கோவை அச்சகம் திகழும். இவ்வாறு முதலமைச்சர் கூறியுள்ளார்.