திருப்பூர், டிசம்பர் 7
திருப்பூரில் ஷேர்ஆ ட்டோ பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் 5 பேர் படுகாயங்களுடன் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் .
திருப்பூர் பழைய பேருந்து நிலையத்திலிருந்து நல்லூர் வரை செல்லும் பயணிகள் வசதிக்காக ஏராளமான ஷேர் ஆட்டோக்கள் பயணித்து வருகின்றன . மற்ற ஆட்டோக்களை விட ஷேர் ஆட்டோ கட்டணம் குறைவென்பதால் பெரும்பாலன பொதுமக்கள் இதில் பயணித்து வருகின்றனர்.
இந்நிலையில் இன்று நல்லூர் பகுதியில் இருந்து பயணிகளை ஏற்றி வந்த ஷேர் ஆ ட்டோ வேலன் ஓட்டல் நிறுத்தம் கடந்த பின்பு குப்பை வண்டியை முந்தி செல்ல முயன்று சாலையில் பக்கவாட்டில் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்துள்ளது.
இந்த விபத்தால் ஆட்டோவில் பயணம் செய்த 5 பேர் படுகாயமடைந்தனர் . உடனடியாக ஆம்புலன்ஸ் வரவழைக்கபப்ட்டு அவர்கள் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கபட்டனர். விபத்து குறித்து திருப்பூர் தெற்கு காவல்துறை விசாரனை மேற்கொண்டு வருகின்றனர் .