முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக அமைக்கப்பட்ட ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தின் முன்பு மருத்துவர்கள் நேரில் ஆஜராகி விளக்கமளித்தனர்.
ஜெயலலிதா மரணம் குறித்து ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. சென்னை எழிலகத்தில் உள்ள இந்த அலுவலகத்தில் நீதிபதி முன்பு வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள் ஆஜராகி விளக்கம் அளித்து வருகின்றனர். தீபா கணவர் மாதவன், திமுக வழக்கறிஞர் சரவணன் ஆகியோரிடமும் விசாரணை நடத்தப்பட்டது. அதேபோல, மருத்துவ கல்வி முன்னாள் இயக்குநர் நிர்மலா, ராஜீவ்காந்தி மருத்துவமனை டீன் நாராயணபாபு ஆகிய இருவரும் ஆணையம் முன்பு ஆஜராகி விளக்கம் அளித்தனர்.
இந்த நிலையில், நீரிழிவு நிபுணர் தர்மராஜ் மற்றும் ஜெயலலிதா மரண படுக்கையில் இருந்தபோது கைரேகை வாங்கிய மருத்துவர் பாலாஜி ஆகிய இருவரும் இன்று ஆஜராகினர். நீரிழிவு நோய் குறித்த பல்வேறு சந்தேகங்களுக்கு மருத்துவர் தர்மராஜ் விளக்கம் அளித்தார். அதேபோல, கைரேகை குறித்து மருத்துவர் பாலாஜியிடம் நீதிபதி ஆறுமுகசாமி பல்வேறு கேள்விகளை எழுப்பினார். பின்னர், ஜெயலலிதாவுக்குத் தரப்பட்ட சிகிச்சை, உணவு மற்றும் சந்திப்பு ஆவணங்களையும் மருத்துவர்கள் தாக்கல் செய்தனர். இதுவரையில் அரசு மருத்துவர்கள் 6 பேரிடமும் தனிநபர் இருவரிடமும் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.