பரோல் வழங்கினால் வெளிநாடு தப்பிச் சென்று விடுவேன் என்ற தமிழக அரசின் குற்றச்சாட்டு முற்றிலும் தவறானது என ராஜிவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் இருக்கும் நளினி உயர்நீதிமன்றத்தில் விளக்கம் அளித்துள்ளார்.
முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனைக் கைதியாக நளினி வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். தமது மகளின் திருமண ஏற்பாடுகளைக் கவனிக்க 6 மாதங்கள் பரோல் வழங்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். ஆனால் அவர் வெளிநாடு தப்பிச் சென்று விடக்கூடும் என்று கூறி பரோல் வழங்க முடியாது எனத் தமிழக அரசு சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு தற்போது நளினி தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அதில், கடந்த 2014-ம் ஆண்டு தம்மை முன்கூட்டியே விடுதலை செய்ய தமிழக அரசு முடிவு செய்ததைச் சுட்டிக் காட்டியுள்ளார். ஆனால், இதற்கு உச்சநீதிமன்றம் தடை விதித்ததால் தான் விடுதலைப் பெற முடியவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். தம்மை விடுதலை செய்ய முடிவெடுத்த தமிழக அரசு, தற்போது பரோல் வழங்க மறுப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது என்றும், இந்த வழக்கில் பேரறிவாளனுக்கு பரோல் வழங்கியதைப் போலவே, தமக்கும் 6 மாதம் பரோல் வழங்க வேண்டும் என நளினி கேட்டு கொண்டுள்ளார்.