முன்னாள் காதலியை அபகரித்ததால் நடந்த கொலையை லவ் ஜிகாத் என மாற்றிய கொலையாளி - திடுக்கிடும் தகவல்



டிசம்பர் 7




வடமாநிலத்தில் லவ் ஜிகாத் பெயரை சொல்லி, தனது முன்னாள் காதலியுடன் பழகிய வாலிபரை கோடாரியால் வெட்டிக் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

மேற்கு வங்கத்தைச் சேர்ந்தவர் முகமது பட்டா சேக். இவர், ராஜஸ்தானில் தங்கி பணி புரிந்ததாக தெரிகிறது. முகமதுவை ஒருவர் கோடாரியால் கடுமையாகத் தாக்கி பின்னர் மண்ணெண்ணெய் ஊற்றித் தீ வைத்து எரித்து அந்த வீடியோவை சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளத்தில் பரவியதையடுத்து போலீஸார் இதுகுறித்து விசாரணை நடத்தினர். 



அதில், இந்தச் சம்பவம் ராஜஸ்தான் மாநிலம் ராஜ்சாமண்ட் மாவட்டத்தில் தேவ் சாலையில் உள்ள ராஜ்நகரில் நடந்திருப்பது தெரியவந்துள்ளது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீஸார், பாதி எரிந்த நிலையில் இருந்த சடலத்தைக் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். சம்பவ இடத்தில் இருந்து கோடாரி மற்றும் இருசக்கர வாகனத்தை போலீஸார் கைப்பற்றினர். இதுகுறித்து ராஜஸ்தான் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த வீடியோவில் ஒருவர், முகமதுவை கோடாரியை கொண்டு கடுமையாகத் தாக்குகிறார். தாக்குதலுக்குள்ளான முகமது தன்னை விட்டுவிடுமாறு கெஞ்சுகிறார். மீண்டும் தொடர்ந்து அந்த நபர் தாக்குகிறார். இதனை மற்றொருவர் வீடியோ பதிவு செய்கிறார். தாக்குதலுக்குள்ளான முகமது மயக்கமடைந்து கீழே விழுகிறார். பின்னர், அவர் மீது அந்த நபர் மண்ணெண்ணெய் ஊற்றித் தீ வைத்து எரிக்கிறார். இந்தக் கொடூர காட்சியை முழுமையாகப் படம் பிடித்து சமூகவலைதளங்களில் பதிவிட்டுள்ளனர். இதனைத்தொடர்ந்து மற்றோரு வீடியோவை பதிவிட்ட அந்த நபர், அதில் லவ் ஜிகாதில் இருந்து சிறுமியை காப்பாற்றவே இப்படிச் செய்ததாக தனது குற்றத்தை நியாயப்படுத்தி ஒரு வீடியோ பதிவையும் வெளியிட்டிருந்தார். 

இந்த வீடியோ சமூக வலைதளத்தில் பரவியதையடுத்து காவல்துறை அதிகாரிகள் இதுகுறித்து விசாரணை நடத்தினர். குற்றம் சாட்டப்பட்ட குற்றவாளி ஷம்பூநாத் ரைகேர் இன்று காலை போலீசார் கைது செய்தனர். அவரிடம் விசாரனை நடத்தியதில், ஷம்பூநாத்தின் முன்னாள் காதலியுடன் முகமது பட்டா பழகி வந்ததால், இந்த கொலை நடந்து உள்ளது. ஆனால், இதனை லவ் ஜிகாதில் இருந்து சிறுமியை காப்பாற்றவே இப்படி செய்ததாகக் கொலையாளி வீடியோவில் பதிவு செய்து இருந்தது மிகவும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Newsletter

Left Parties Stage Demonstration in Coimbatore Urging Rollback of Fuel and Commercial LPG Price Hike..!

Demanding an immediate rollback of the hike in petrol, diesel and commercial LPG cylinder prices, the CPI(M), CPI and CP...

பெட்ரோல், டீசல், சிலிண்டர் விலை உயர்வை திரும்பப் பெற கோரி கோவையில் இடதுசாரி கட்சிகள் ஆர்ப்பாட்டம்..!

பெட்ரோல், டீசல் மற்றும் வணிக பயன்பாட்டிற்கான எரிவாயு சிலிண்டர் விலை உயர்வை திரும்பப் பெற வலியுறுத்தி, கோவையில் மார்க்சிஸ...

புதிய தமிழக அரசுக்கு வாழ்த்து தெரிவித்த கோவை மண்டல திருக்கோவில்கள் பரம்பரை அறங்காவலர்கள் சங்கம்..!

புதியதாக பொறுப்பேற்றுள்ள தமிழக முதல்வர் ஜோசப் விஜய் தலைமையிலான அரசுக்கு கோவை மண்டல திருக்கோவில்கள் பரம்பரை அறங்காவலர்கள்...

SSLC தேர்வு முடிவுகள் 2026: கொங்கு மண்டலத்தில் 97.09 சதவீதம் தேர்ச்சி விகிதத்துடன் கோவை முதலிடம்..!

தமிழகத்தில் நடைபெற்ற 2026 எஸ்.எஸ்.எல்.சி பொதுத்தேர்வு முடிவுகளில் புதுக்கோட்டை, சிவகங்கை, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்கள் மாந...

கோவையில் 1,500-க்கும் மேற்பட்ட மருந்தகங்கள் அடைப்பு; பொதுமக்கள் அவதி..!

ஆன்லைன் மருந்து விற்பனைக்கு தடை விதிக்க வேண்டும், கார்ப்பரேட் நிறுவனங்களின் தள்ளுபடி விற்பனையை கட்டுப்படுத்த வேண்டும் உள...

மீண்டும் இ-மெயில் மூலம் கலெக்டர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்..! – மர்ம நபரை பிடிக்க போலீசார் தீவிரம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மீண்டும் இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்ததை தொடர்ந்து, மெட்டல் டிடெக்டர் கருவ...