பாதுகாப்பு வேண்டி கோவையில் காதல் ஜோடி தஞ்சம்

கோவை, டிசம்பர் 8

பாதுகாப்பு கேட்டு கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் காதல் ஜோடி தஞ்சம் அடைந்தனர். 

கன்னியாகுமரி மாவட்டம் நாகர் கோவில் பகுதியை சேர்ந்தவர் நிது (28) தனியார் டிராவல்ஸ் நிறுவனத்தில் ஓட்டுனராக பணி புரிகிறார். 

அதே பகுதி பகுதியை சேர்ந்தவர் பிளசி (21). பொறியியல் பட்டதாரியான இவரும் நிதுவும் கடந்த ஓராண்டாக காதலித்து வந்தனர்.

இவர்கள் காதலுக்கு இருவரது வீட்டில் இருந்தும் எதிர்ப்பு வந்ததால் கடந்த நவம்பர் மாதம் 30-ம் தேதி இருவரும் திருமணம் செய்து கொண்டனர். 

இந்த நிலையில், தங்கள் உயிருக்கு உரிய பாதுகாப்பு வேண்டும் என்று கோரி இன்று கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் இருவரும் தஞ்சமடைந்தனர்.



இது தொடர்பாக நிது செய்தியாளர்களிடம் கூறுகையில், 'நாங்கள் இருவரும் வெவ்வேறு மதங்களை சேர்ந்தவர்கள் என்பதால் எங்கள் வீடுகளில் எதிர்ப்பு கிளம்பியது. இதனால் இருவரும் கடந்த நவம்பர் மாதம் 30-ம் தேதி போத்தனூர் முருகன் கோவிலில் திருமணம் செய்துகொண்டோம். 

அப்போது முதல் எங்கள் வீடுகளில் இருந்து எங்களுக்கு கொலை மிரட்டல் வருகிறது. இதனால் எங்கள் உயிருக்கு பாதுகாப்பு அளிக்க கோரி காவல் ஆணையரிடம் மனு அளித்துள்ளோம்'என்றார்.

Newsletter

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...