பேச்சுவார்த்தைக்கு முன்வராத மாநகராட்சி அதிகாரிகளைக் கண்டித்து துப்புரவு பணியாளர்கள் போராட்டம்

கோவை, டிசம்பர் 5

ஊதியம், பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகள் தொடர்பாகத் தொழிலாளர் நலத்துறை மூலம் நடக்கும் பேச்சுவார்த்தைக்கு வராத மாநகராட்சி அதிகாரிகளைக் கண்டித்து துப்புரவுப் பணியாளர்கள் வீடு திரும்பா போராட்டத்தில் ஈடுபட்டனர். 

கோவை மாநகராட்சியில் பணிபுரியும் 2,035 துப்புரவு பணியாளர்கள் மற்றும் 300 ஓட்டுநர்கள், கிளீனர்களுக்கு சட்டப்படி ஊதியம், போனஸ், பணி நிரந்தரம் மற்றும் அடிப்படை பாதுகாப்பு உபகரணங்களை வழங்கக்கோரிக் கடந்த அக்டோபர் மாதம் 19 மற்றும் 20-ம் தேதிகளில் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர். இதனைத்தொடர்ந்து நடந்தப் பேச்சுவார்த்தையில் மூன்று வாரக் காலத்திற்குள் சட்டப்படிச் சம்பளம் மற்றும் போனஸை வழங்குவதாக மாநகராட்சி நிர்வாகம், தொழிலாளர் நலத்துறை அதிகாரிகளின் முன்னிலையில் எழுத்துப்பூர்வமாக உறுதியளித்தும், இதுவரை நடைமுறைப்படுத்தவில்லை எனக் கூறப்படுகிறது. 

இந்நிலையில், கடந்த மாதம் 30ஆம் தேதி தொழிலாளர் நலத்துறையில் டிசம்பர் 1-ம் தேதியில் இருந்து தொடர் போராட்டம் நடத்தப்போவதாகத் துப்புரவு பணியாளர்கள் நலச்சங்கத்தின் சார்பாக கடிதம் கொடுக்கப்பட்டது. அப்போது, எம்ஜிஆர் நூற்றாண்டு விழா நடைபெறுவதால் போராட்டம் நடத்த வேண்டாம் எனத் தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் கேட்டுக்கொண்டதின் பேரில், 1-ம் தேதி நடைபெற இருந்த போராட்டம் ஒத்தி வைக்கப்பட்டது. 

இதனையடுத்து, இன்று தொழிலாளர் நலத்துறை அதிகாரி முன்னிலையில் மாநகராட்சி அதிகாரிகள், தொழிலாளர் நலத்துறை சங்கங்கள் சார்பாகப் பேச்சுவார்த்தை நடைபெற இருந்தது. இந்தப் பேச்சுவார்த்தையில் மாநகராட்சி அதிகாரிகள் கலந்துகொள்ளாததால் துப்புரவு பணியாளர்கள் ஏமாற்றம் அடைந்தனர். மேலும், பேச்சுவார்த்தைக்கு வராத மாநகராட்சி அதிகாரிகளைக் கண்டித்து தொழிலாளர் நலத்துறை அலுவலக நுழைவு வாயிலில் அமர்ந்து வீடு திரும்பாமல் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Newsletter

Left Parties Stage Demonstration in Coimbatore Urging Rollback of Fuel and Commercial LPG Price Hike..!

Demanding an immediate rollback of the hike in petrol, diesel and commercial LPG cylinder prices, the CPI(M), CPI and CP...

பெட்ரோல், டீசல், சிலிண்டர் விலை உயர்வை திரும்பப் பெற கோரி கோவையில் இடதுசாரி கட்சிகள் ஆர்ப்பாட்டம்..!

பெட்ரோல், டீசல் மற்றும் வணிக பயன்பாட்டிற்கான எரிவாயு சிலிண்டர் விலை உயர்வை திரும்பப் பெற வலியுறுத்தி, கோவையில் மார்க்சிஸ...

புதிய தமிழக அரசுக்கு வாழ்த்து தெரிவித்த கோவை மண்டல திருக்கோவில்கள் பரம்பரை அறங்காவலர்கள் சங்கம்..!

புதியதாக பொறுப்பேற்றுள்ள தமிழக முதல்வர் ஜோசப் விஜய் தலைமையிலான அரசுக்கு கோவை மண்டல திருக்கோவில்கள் பரம்பரை அறங்காவலர்கள்...

SSLC தேர்வு முடிவுகள் 2026: கொங்கு மண்டலத்தில் 97.09 சதவீதம் தேர்ச்சி விகிதத்துடன் கோவை முதலிடம்..!

தமிழகத்தில் நடைபெற்ற 2026 எஸ்.எஸ்.எல்.சி பொதுத்தேர்வு முடிவுகளில் புதுக்கோட்டை, சிவகங்கை, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்கள் மாந...

கோவையில் 1,500-க்கும் மேற்பட்ட மருந்தகங்கள் அடைப்பு; பொதுமக்கள் அவதி..!

ஆன்லைன் மருந்து விற்பனைக்கு தடை விதிக்க வேண்டும், கார்ப்பரேட் நிறுவனங்களின் தள்ளுபடி விற்பனையை கட்டுப்படுத்த வேண்டும் உள...

மீண்டும் இ-மெயில் மூலம் கலெக்டர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்..! – மர்ம நபரை பிடிக்க போலீசார் தீவிரம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மீண்டும் இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்ததை தொடர்ந்து, மெட்டல் டிடெக்டர் கருவ...