நலிந்து வரும் சுண்ணாம்பு தயாரிக்கும் தொழில்

கோவை, டிசம்பர் 5

மூலப்பொருட்களின் விலை ஏற்றம் , ஆள் பற்றாக்குறை மற்றும் பொதுமக்களிடையே போதிய விழிப்புணர்வு இல்லாத காரணத்தினால் கோவையில் சுண்ணாம்பு தயாரிக்கும் தொழில் நலிந்து வருகிறது.

கோவை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளான பொள்ளாச்சி, கிணத்துகடவு, சரவணம்பட்டி, குனியமுத்தூர், தொண்டாமுத்தூர், சுந்தராபுரம், கவுண்டம்பாளையம், சின்ன மேட்டுப்பாளையம், பூசாரி பாளையம் போன்ற பகுதிகளில் கடந்த 5 வருடங்களுக்கு முன்னர் 3௦௦௦திற்கும் மேற்பட்டோர் சுண்ணாம்பு தயாரிக்கும் தொழிலில் பணிப்புரிந்து வந்தனர்.



இந்நிலையில் தற்போது சுண்ணாம்பு தயாரிக்கும் பணியில் 1௦௦௦க்கும் மேற்பட்டோர் மட்டுமே பணிபுரிந்து வருகின்றனர்.

சுண்ணாம்பு தயாரிக்க தேவைப்படும் முக்கிய மூலப்பொருட்களான ஓடை சுண்ணாம்பு கல் , நிலக்கரி, தேங்காய் மட்டை போன்றவையின் விலை உயர்வே இதற்கு காரணமாக உள்ளது என்றாலும் பொதுமக்களிடையே போதிய விழிப்புணர்வும் இல்லாதது தான் முக்கிய காரணமாக கருதப்படுகிறது.   

கடந்த காலங்களில் பண்டிகை தினம் என்றாலே வீட்டின் சுவர்களில் சுண்ணாம்பு பூசப்படுவது வழக்கம். ஆனால் தற்போது உள்ள நவீன காலத்தில் சுவர்களுக்கு செயற்கை சாயம் பூசப்படுகிறது. வீட்டின் மேல் தளத்தில் வெயிலின் உஷ்ணம் போக்க சுண்ணாம்புகளை வைத்து சுருக்கி அமைப்பது வழக்கம். தற்போது கப்பி மண், சிப்பி போன்றவை வைத்து சுருக்கி அமைக்கப்படுகிறது. ஆடு, மாடு , கோழி என கால்நடைகளுக்கு கிருமி நாசியாகவும் சுண்ணாம்பு உபயோகப்படுகிறது. ஆனால் தற்போது ரசாயன நாசினி தெளிக்கப்படுகிறது.

இது குறித்து சுண்ணாம்பு தயாரிக்கும் தொழில் நடத்தி வரும் அ. ராபியா கூறியதாவது,

“பண்டைய காலங்களில் சுண்ணாம்புகளை வைத்து பாலம், கட்டடங்கள், அரண்மனைகள் போன்றவை கட்டப்பட்டன. அவ்வுளவு உறுதி தன்மை கொண்டது. சிமெண்ட் வந்தவுடன் சுண்ணாம்புகளின் பயன்பாடு கம்மியாகின. சுண்ணாம்பில்  மருத்துவ குணங்கள் அதிகம் உள்ளன.

வீட்டின் சுவர்களில் அதனை பூசும் போது கிருமி நாசினியாக செயல்படுகிறன. முட்டை வைக்கும் கோழிகளுக்கு சுண்ணாம்பு சத்து தேவைப்படுவதால் உணவுடன் கலந்து சுண்ணாம்பு தரப்படுகிறன.

தென்னை மரங்களில் சுண்ணாம்பு பூசுவதால் கரையான், தென்னை புழு போன்ற பூச்சுகள் அதனை தாக்குவதில்லை. இது போன்று சுண்ணாம்பபின் மருத்துவ குணங்களை பொதுமக்களுக்கு தெரியப்படுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இதற்கு தமிழக அரசாங்கம் முன் வரவேண்டும்,” என்றார்.

சுண்ணாம்புபின் விலை பெரும்பாலும் செய்கை சாயம் விட மிகவும் குறைவாக தான் விற்கப்படுகின்றன. கிராமபுறங்களில் பெரும்பாலும் சுண்ணாம்பு தான் சுவர்களில் பூசப்படுகிறது. மூலப்பொருட்களின் விலை உயர்வு ஒருபுறம் இருக்க மூலப்பொருட்கள் கிடைப்பதிலேயே பெரும் சிரமம் நிலவி வருகின்றன. தொழிலை விரிவுப்படுத்த வங்கிகளில் கடன் கேட்டால் சுண்ணாம்பு தொழிலுக்கு கடன் மறுக்கப்படுகிறது என்ற குற்றசாட்டை தொழிலாளர்கள் முன் வைக்கின்றனர். 

இது குறித்து சுண்ணாம்பு தொழிலில் ஈடுப்பட்டுவரும் சரவணகுமார் கூறியதாவது,

“ஓடை சுண்ணாம்பு கல் கிடைப்பதில் மிகுந்த சிரமம் ஏற்படுகிறது. விலைநிலங்களில் 3 மாதங்களுக்கு ஒரு முறை நிலத்துக்கு அடியில் 3 அடி அழத்தில் விளைய கூடிய ஓடை சுண்ணாம்பு கல் விலைநிலங்களை அழித்து வீடுகள் கட்ட துவக்கப்பட்ட காரணத்தினால் அதிகளவு கிடைப்பதில்லை.

சுண்ணாம்பு தொழிலை ஊக்குவிக்க கூட்டுறவு வங்கி, விவசாய வங்கி, தனியார் மற்றும் தேசிய வங்கிகளில் கடன் வழங்க மறுக்கப்படுகிறது. இதே நிலை நீடித்தால் சுண்ணாம்பு தயாரிக்கும் பண்டைய கால தொழில் அழிந்து விடும்,” என்றார்.

நலிந்து வரும் சுண்ணாம்பு தயாரிப்பு தொழிலை காக்க பொதுமக்களுக்கு விழிப்புணர்வு மற்றும் வங்கிகளில் கடன் உதவி பெற்று தர தமிழக அரசாங்கம் முன் வர வேண்டும் என்பதே சுண்ணாம்பு தொழிலாளர்களின் கருத்தாக உள்ளது.

Newsletter

Left Parties Stage Demonstration in Coimbatore Urging Rollback of Fuel and Commercial LPG Price Hike..!

Demanding an immediate rollback of the hike in petrol, diesel and commercial LPG cylinder prices, the CPI(M), CPI and CP...

பெட்ரோல், டீசல், சிலிண்டர் விலை உயர்வை திரும்பப் பெற கோரி கோவையில் இடதுசாரி கட்சிகள் ஆர்ப்பாட்டம்..!

பெட்ரோல், டீசல் மற்றும் வணிக பயன்பாட்டிற்கான எரிவாயு சிலிண்டர் விலை உயர்வை திரும்பப் பெற வலியுறுத்தி, கோவையில் மார்க்சிஸ...

புதிய தமிழக அரசுக்கு வாழ்த்து தெரிவித்த கோவை மண்டல திருக்கோவில்கள் பரம்பரை அறங்காவலர்கள் சங்கம்..!

புதியதாக பொறுப்பேற்றுள்ள தமிழக முதல்வர் ஜோசப் விஜய் தலைமையிலான அரசுக்கு கோவை மண்டல திருக்கோவில்கள் பரம்பரை அறங்காவலர்கள்...

SSLC தேர்வு முடிவுகள் 2026: கொங்கு மண்டலத்தில் 97.09 சதவீதம் தேர்ச்சி விகிதத்துடன் கோவை முதலிடம்..!

தமிழகத்தில் நடைபெற்ற 2026 எஸ்.எஸ்.எல்.சி பொதுத்தேர்வு முடிவுகளில் புதுக்கோட்டை, சிவகங்கை, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்கள் மாந...

கோவையில் 1,500-க்கும் மேற்பட்ட மருந்தகங்கள் அடைப்பு; பொதுமக்கள் அவதி..!

ஆன்லைன் மருந்து விற்பனைக்கு தடை விதிக்க வேண்டும், கார்ப்பரேட் நிறுவனங்களின் தள்ளுபடி விற்பனையை கட்டுப்படுத்த வேண்டும் உள...

மீண்டும் இ-மெயில் மூலம் கலெக்டர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்..! – மர்ம நபரை பிடிக்க போலீசார் தீவிரம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மீண்டும் இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்ததை தொடர்ந்து, மெட்டல் டிடெக்டர் கருவ...