7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நில அளவை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்

கோவை, டிசம்பர் 4

திட்டப்பணிக்கு எனத் தனியாக பணியாளர்களை நியமித்தல் உள்பட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோவை மண்டல நில அளவை அலுவலர்களின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த போராட்டத்தின் போது, தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள் சங்கத்தின் சார்பாகத் துணை ஆய்வாளர் தேர்வில் உள்ள குறைகளை களையவும், திட்டப்பணிக்கு எனத் தனியாக பணியாளர்களை நியமிக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர். மாவட்ட அளவில் பணியாளர்களின் பணிமாறுதல் தொடர்பாக இயக்குநரகம் பிறப்பித்த உத்தரவு, ஊழியர்களிடம் குழப்பத்தையும், மன உளைச்சலையும் ஏற்படுத்தியுள்ளதாகத் தெரிவித்தனர்.



மேலும், உயர்பதவிகள் நிரப்பப்படாமல் காலியாக இருப்பதால் நிர்வாகமும், ஊழியர்களும் பாதிப்புக்குள்ளாகியுள்ளதாகக் குறிப்பிட்ட அவர்கள்,  அனைத்து நில அளவைக் களப்பணியாளர்களின் நாட்குறிப்புகளை எளிமைப்படுத்திடவும், நிலஅளவையர் அனைவருக்கும் பவானிசாகர் நிர்வாகப் பயிற்சியினை வழங்கி களப்பணியாளர்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட பயணப்படி ஊதியத்துடன் பட்டியலிட்டு வழங்கிட வலியுத்தியும்,  கோஷங்களை எழுப்பினர். 

Newsletter

கவுண்டம்பாளையத்தில் பெண்களிடம் ஆபாச சைகைகள் காட்டி அச்சுறுத்திய நபர் மீது கைது நடவடிக்கை

கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் பெண்களை குறிவைத்து அரை நிர்வாணமாக நின்று ஆபாச சைகைகள் காட்டி அச்சுறுத்திய 38 வயது நபரை போ...

ஆனைகட்டி அருகே உக்ரைன் சுற்றுலா பயணியை விரட்டிய காட்டு யானை

கோவை மாவட்டம் ஆனைகட்டி அருகே ஒற்றை காட்டு யானை விரட்டியதால் உயிர் தப்பிக்க ஓடிய உக்ரைன் நாட்டைச் சேர்ந்த சுற்றுலா பயணி ப...

அவிநாசி தனித்தொகுதி தவெக MLA கமலி அமைச்சராக பதவியேற்பு

திருப்பூர் மாவட்டம் அவிநாசி தனித்தொகுதி தமிழக வெற்றிக் கழக MLA கமலி, தவெக அரசின் இரண்டாம் கட்ட அமைச்சரவை விரிவாக்கத்தில்...

கோவை மாவட்டத்தை சேர்ந்த 2 தவெக MLA-க்களுக்கு அமைச்சரவை பதவி..!

கோவை வடக்கு மற்றும் கிணத்துக்கடவு தொகுதிகளை சேர்ந்த தவெக சட்டமன்ற உறுப்பினர்கள் சம்பத்குமார், விக்னேஷ் குமார் ஆகியோருக்க...

கோவையில் இன்று (21.05.2026) மாதாந்திர மின் பராமரிப்பு:  பல பகுதிகளில் மின் நிறுத்தம்

கோவை நகரில் மே 21, 2026 காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை ஐந்து துணை மின்நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும...

Left Parties Stage Demonstration in Coimbatore Urging Rollback of Fuel and Commercial LPG Price Hike..!

Demanding an immediate rollback of the hike in petrol, diesel and commercial LPG cylinder prices, the CPI(M), CPI and CP...