மாறுவேட போட்டியில் அசத்திய மாற்றுதிறனாளி மாணவர்கள்

கோவை, டிசம்பர் 4

உலக மாற்றுதிறனாளிகள் தினம் டிசம்பர் 3 ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு கோவை ஆர். எஸ். புரத்தில் உள்ள மாநகராட்சி காதுகேளாதோர் பள்ளியில் மாற்று திறனாளி மாணவர்களுக்கு மாறுவேட போட்டி நடைபெற்றது.

அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் 35க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்துகொண்டு தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினார்கள்.

இதில் நேரு மாமா, மருத்துவர், ஏஞ்சல், ராணுவ வீரர், போலீஸ், விநாயகர், தமிழ் வாத்தியார், ஜெண்டில்மேன் போன்ற வேடங்களை அணிந்து மாணவர்கள் அசத்தினர்கள்.

இப்பள்ளியில் காதுகேளாதோர், ஆடிசம், மூளை வளர்ச்சி குன்றிய மாணவர்கள் படித்து வருகின்றனர்.

மேலும் பள்ளி செல்ல தயார் செய்யும் மையம் சிறப்பு ஆசிரியர் எஸ். புஷ்பவள்ளி கூறுகையில் " மாற்று திறனாளி மாணவர்களுக்கு எங்கள் மையத்தில் சிறப்பு பிசியோதிரபி, பேச்சு பயிற்சி போன்றவை சிறப்பாக தரப்படுகிறது. பெற்றோர்கள் தங்களது குழந்தைகளின் வளர்ச்சியை நேரடியாக காணலாம். அரசாங்கத்தால் இம்மையம் காதுகேளாதோர் பள்ளியில் நடத்தப்படுகிறது இதற்கு கட்டணம் கிடையாது. தனியார் பள்ளிகளை விட இங்கு சிறப்பான பயிற்சிகள் மாணவர்களுக்கு தரப்படுகின்றது," என்றார்.

Newsletter

Left Parties Stage Demonstration in Coimbatore Urging Rollback of Fuel and Commercial LPG Price Hike..!

Demanding an immediate rollback of the hike in petrol, diesel and commercial LPG cylinder prices, the CPI(M), CPI and CP...

பெட்ரோல், டீசல், சிலிண்டர் விலை உயர்வை திரும்பப் பெற கோரி கோவையில் இடதுசாரி கட்சிகள் ஆர்ப்பாட்டம்..!

பெட்ரோல், டீசல் மற்றும் வணிக பயன்பாட்டிற்கான எரிவாயு சிலிண்டர் விலை உயர்வை திரும்பப் பெற வலியுறுத்தி, கோவையில் மார்க்சிஸ...

புதிய தமிழக அரசுக்கு வாழ்த்து தெரிவித்த கோவை மண்டல திருக்கோவில்கள் பரம்பரை அறங்காவலர்கள் சங்கம்..!

புதியதாக பொறுப்பேற்றுள்ள தமிழக முதல்வர் ஜோசப் விஜய் தலைமையிலான அரசுக்கு கோவை மண்டல திருக்கோவில்கள் பரம்பரை அறங்காவலர்கள்...

SSLC தேர்வு முடிவுகள் 2026: கொங்கு மண்டலத்தில் 97.09 சதவீதம் தேர்ச்சி விகிதத்துடன் கோவை முதலிடம்..!

தமிழகத்தில் நடைபெற்ற 2026 எஸ்.எஸ்.எல்.சி பொதுத்தேர்வு முடிவுகளில் புதுக்கோட்டை, சிவகங்கை, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்கள் மாந...

கோவையில் 1,500-க்கும் மேற்பட்ட மருந்தகங்கள் அடைப்பு; பொதுமக்கள் அவதி..!

ஆன்லைன் மருந்து விற்பனைக்கு தடை விதிக்க வேண்டும், கார்ப்பரேட் நிறுவனங்களின் தள்ளுபடி விற்பனையை கட்டுப்படுத்த வேண்டும் உள...

மீண்டும் இ-மெயில் மூலம் கலெக்டர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்..! – மர்ம நபரை பிடிக்க போலீசார் தீவிரம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மீண்டும் இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்ததை தொடர்ந்து, மெட்டல் டிடெக்டர் கருவ...