கோவை. டிசம்பர் 4
கே.எம்.சி.எச் மருத்துவமனையில் 2014 ஜுலை மாதம் முதல் தற்போது வரை 75 கல்லீரல் மாற்று அறுவைச் சிகிச்சை வெற்றிகரமாக செய்து முடிக்கப்பட்டுள்ளது. இதனை கொண்டாடும் விதமாக சனிக்கிழமை கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை நோயாளிகளுக்கு துணைபுரியும் வகையில் “மறுவாழ்வு” என்ற குழு தொடங்கப்பட்டது.
இந்த குழு கல்லீரல் நோயாளிகள், அதே போன்ற நோயினை ஏற்கனவே அனுபவித்தவர்களோடு உரையாட மற்றும் அவர்களது பயத்தை போக்கவும், தகவல் அறியவும். கருத்துகளை பகிர்ந்துகொள்ளவும் மிகவும் உதவியாக இருக்கும் என கே.எம்.சி.எச் மருத்துவமனை தலைவர் மருத்துவர் நல்ல ஜி. பழனிசாமி தெரிவித்தார்.
மேலும் அவர் கூறுகையில், “தமிழகத்தில் சென்னைக்கு அடுத்தபடியாக கோவையில் தான் அனைத்துவகை கல்லீரல் மாற்று அறுவைச்சிகிச்சை வழக்கும் மிகப்பெரிய பிரிவு உள்ளது. இப்பிரிவில் முற்றிய கல்லீரல் புற்று, கணைய புற்று ஆகியவற்றுக்கும் சிகிச்சை வழங்கப்படுகிறது,” என்றார்.
இந்நிகிழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக நடிகர் சிவக்குமார் கலந்துகொண்டார். அவர் பேசுகையில் ” நோய்களில் கொடுமையானது கல்லீரல் நோய்தான் மற்ற எல்லா நோய்களும் முதலே தெரிய வாய்ப்புள்ளது ஆனால் கல்லீரல் மற்றுமே முற்றிலும் முற்றிய பிறகு தான் தெரியவரும் எனவே பொதுமக்கள் விழிப்புணர்வோடு இருக்க வேண்டும்,” என்றார்.
கோவையில் அனைத்துவகை அதிநவீன தொழில்நுட்பமும் உள்ளது எனவே கல்லீரல் நோயாளிகள் கல்லீரல் மாற்று அறுவைச் சிகிச்சைக்காக பயப்பட வேண்டாம் என்று கே.எம்.சி.எச் கல்லீரல் பிரிவு தலைவர் மருத்துவர் எஸ். விவேகானந்தன் கூறினார்.