விதிமுறைகளை மீறி அமைக்கப்பட்டுள்ள எம்ஜிஆர் நூற்றாண்டு விழா பேனர்கள் குறித்து வழக்கு தொடரப்படும்- எம்.எல்.ஏ கார்த்திக்


கோவை, டிசம்பர் 3

எம்ஜிஆர் நூற்றாண்டு விழா பேனர்கள் விதிமுறைக்கு மீறி வைக்கப்பட்டுள்ளதால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்போவதாக திமுக சட்டமன்ற உறுப்பினர் ந. கார்த்திக் கூறியுள்ளார்.

இதுகுறித்து இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது:-

கோவையில் இன்று நடைபெறும் எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவிற்காக விதிமுறையை மீறி பேனர்கள் வைக்கப்பட்டுள்ளதாக கடந்த நவம்பர் 30-ஆம் தேதியன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் திமுக-வால் வழக்கு தொடரப்பட்டது. இதில், உயர் நீதிமன்ற நீதிபதிகள்போக்குவரத்து மற்றும் மக்களுக்கு இடையூறாக இருக்கும் கட் அவுட் மற்றும் பேனர்களை அகற்ற ஆணையிட்டனர்.

இதனைத்தொடர்ந்து மீண்டும் அனுமதியின்றி புதிதாக வைக்கப்பட்டுள்ள கட் அவுட் மற்றும் பேனர்களை அகற்ற உயர் நீதிமன்ற ஆணையின்படி நடவடிக்கை எடுக்கக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் திமுக-வினர் மனு அளித்தனர். இருப்பினும், அதிமுக நிர்வாகிகளால் கோவையில் ஆயிரக்கணக்கான பேனர்கள் மற்றும் கட் அவுட்கள் 10 அடி முதல் 30 அடி உயரத்தில் விதிமுறைகளுக்கு மாறாக வைக்கப்பட்டுள்ளது.

உயர் நீதிமன்ற ஆணையை மதிக்காமல் வைக்கப்படும் கட் அவுட்கள், பேனர்கள் மீது நடவடிக்கை எடுக்காத மாவட்ட நிர்வாகம், மாநகராட்சி நிர்வாகம் மற்றும் காவல்துறை மீது நீதிமன்ற வழக்கு முழு ஆதாரத்துடன் பதியப்படும்.

மேலும், கோவை அண்ணா சிலை அருகே புதிதாக ஜெயலலிதா மற்றும் எம்ஜிஆர் சிலை வைக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் அனுமதி வாங்கி வைத்திருக்கிறார்களா? இல்லையா? என்பது குறித்து ஆராய்ந்து சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Newsletter

Left Parties Stage Demonstration in Coimbatore Urging Rollback of Fuel and Commercial LPG Price Hike..!

Demanding an immediate rollback of the hike in petrol, diesel and commercial LPG cylinder prices, the CPI(M), CPI and CP...

பெட்ரோல், டீசல், சிலிண்டர் விலை உயர்வை திரும்பப் பெற கோரி கோவையில் இடதுசாரி கட்சிகள் ஆர்ப்பாட்டம்..!

பெட்ரோல், டீசல் மற்றும் வணிக பயன்பாட்டிற்கான எரிவாயு சிலிண்டர் விலை உயர்வை திரும்பப் பெற வலியுறுத்தி, கோவையில் மார்க்சிஸ...

புதிய தமிழக அரசுக்கு வாழ்த்து தெரிவித்த கோவை மண்டல திருக்கோவில்கள் பரம்பரை அறங்காவலர்கள் சங்கம்..!

புதியதாக பொறுப்பேற்றுள்ள தமிழக முதல்வர் ஜோசப் விஜய் தலைமையிலான அரசுக்கு கோவை மண்டல திருக்கோவில்கள் பரம்பரை அறங்காவலர்கள்...

SSLC தேர்வு முடிவுகள் 2026: கொங்கு மண்டலத்தில் 97.09 சதவீதம் தேர்ச்சி விகிதத்துடன் கோவை முதலிடம்..!

தமிழகத்தில் நடைபெற்ற 2026 எஸ்.எஸ்.எல்.சி பொதுத்தேர்வு முடிவுகளில் புதுக்கோட்டை, சிவகங்கை, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்கள் மாந...

கோவையில் 1,500-க்கும் மேற்பட்ட மருந்தகங்கள் அடைப்பு; பொதுமக்கள் அவதி..!

ஆன்லைன் மருந்து விற்பனைக்கு தடை விதிக்க வேண்டும், கார்ப்பரேட் நிறுவனங்களின் தள்ளுபடி விற்பனையை கட்டுப்படுத்த வேண்டும் உள...

மீண்டும் இ-மெயில் மூலம் கலெக்டர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்..! – மர்ம நபரை பிடிக்க போலீசார் தீவிரம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மீண்டும் இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்ததை தொடர்ந்து, மெட்டல் டிடெக்டர் கருவ...