அரசு பேருந்து பாலத்திலிருந்து விழுந்து இரண்டு முதியவர்கள் பலி, முப்பதுக்கும் மேற்பட்டோர் காயம்



திருப்பூர், டிசம்பர் 3

அவிநாசியிலிருந்து அன்னூர் நோக்கி அரசு பேருந்து இன்று பிற்பகல் சென்றுகொண்டிருந்தது. அவிநாசியை அடுத்து ஆட்டையம்பாளையம் அருகே செல்லும்போது, அடையாளம் தெரியாத கார் ஒன்று அசுர வேகத்தில் முந்திக்கொண்டு பேருந்தை ஒதுக்கியபடி சென்றது. இதில் நிலை தடுமாறிய அரசு பேருந்து கட்டுப்பாட்டை இழந்து பாலத்திலிருந்து கவிழ்ந்து கீழே விழுந்து விபத்துக்குள்ளானது.

இதில் பேருந்து பக்கவாட்டில் சாய்ந்தபடி விழுந்தது. பேருந்தில் பயணம் செய்த ஐம்பதுக்கும் மேற்பட்டோர் பலத்த காயமடைந்தனர். இதையடுத்து பொதுமக்கள் மற்றும் போலீசார் அடிபட்டவர்களை 108 ஆம்புலன்ஸ் மற்றும் தனியார் ஆம்புலன்ஸ் என பத்துக்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ்கள் மூலம், அவிநாசி அரசு மருத்துவமனை மற்றும் அவிநாசி, திருப்பூர் பகுதிகளிலிருக்கும் தனியார் மருத்துவமனைகளுக்கு கொண்டு சென்றனர். 



இதில் அவிநாசியை அடுத்து தண்டுக்காரன்பாளையம் பகுதியை சேர்ந்த சுண்டப்பன் (70) மற்றும் அவிநாசியை அடுத்து தெக்கலூர் பகுதியை சேர்ந்த கனகராஜ் (55) ஆகய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

மேலும், 8 பெண்கள், ஒரு குழந்தை, 19 ஆண்கள் உட்பட ஐம்பதுக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இவர்களுக்கு அவிநாசி மற்றும் திருப்பூர் அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சையளிக்கப்பட்டது.

இச்சம்பவம் குறித்து அவிநாசி போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். விபத்து நடந்தபகுதியில் ஏராளமான பொதுமக்கள் திரண்டு வந்து வேடிக்கை பார்த்ததால் அப்பகுதியில் போக்குவரத்து சுமார் ஒரு மணிநேரம் பாதிக்கப்பட்டது.

பேருந்து கவிழ்ந்து விபத்துக்-குள்ளானது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Newsletter

Left Parties Stage Demonstration in Coimbatore Urging Rollback of Fuel and Commercial LPG Price Hike..!

Demanding an immediate rollback of the hike in petrol, diesel and commercial LPG cylinder prices, the CPI(M), CPI and CP...

பெட்ரோல், டீசல், சிலிண்டர் விலை உயர்வை திரும்பப் பெற கோரி கோவையில் இடதுசாரி கட்சிகள் ஆர்ப்பாட்டம்..!

பெட்ரோல், டீசல் மற்றும் வணிக பயன்பாட்டிற்கான எரிவாயு சிலிண்டர் விலை உயர்வை திரும்பப் பெற வலியுறுத்தி, கோவையில் மார்க்சிஸ...

புதிய தமிழக அரசுக்கு வாழ்த்து தெரிவித்த கோவை மண்டல திருக்கோவில்கள் பரம்பரை அறங்காவலர்கள் சங்கம்..!

புதியதாக பொறுப்பேற்றுள்ள தமிழக முதல்வர் ஜோசப் விஜய் தலைமையிலான அரசுக்கு கோவை மண்டல திருக்கோவில்கள் பரம்பரை அறங்காவலர்கள்...

SSLC தேர்வு முடிவுகள் 2026: கொங்கு மண்டலத்தில் 97.09 சதவீதம் தேர்ச்சி விகிதத்துடன் கோவை முதலிடம்..!

தமிழகத்தில் நடைபெற்ற 2026 எஸ்.எஸ்.எல்.சி பொதுத்தேர்வு முடிவுகளில் புதுக்கோட்டை, சிவகங்கை, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்கள் மாந...

கோவையில் 1,500-க்கும் மேற்பட்ட மருந்தகங்கள் அடைப்பு; பொதுமக்கள் அவதி..!

ஆன்லைன் மருந்து விற்பனைக்கு தடை விதிக்க வேண்டும், கார்ப்பரேட் நிறுவனங்களின் தள்ளுபடி விற்பனையை கட்டுப்படுத்த வேண்டும் உள...

மீண்டும் இ-மெயில் மூலம் கலெக்டர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்..! – மர்ம நபரை பிடிக்க போலீசார் தீவிரம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மீண்டும் இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்ததை தொடர்ந்து, மெட்டல் டிடெக்டர் கருவ...