அமைச்சர், எம்.எல்.ஏ.க்களின் புகைப்படங்களுடன் வைக்கப்பட்ட பிளக்ஸ் பேனர்: காற்றில் பறக்கும் நீதிமன்ற உத்தரவு


கோவை, நவம்பர் 3

கோவையில் நீதிமன்ற உத்தரவை மீறி அமைச்சர் மற்றும் எம்.எல்.ஏ.க்களின் புகைப்படங்களுடன் அ.தி.மு.க.வினர் பிளக்ஸ் பேனர் அமைத்துள்ளனர்.

கோவையில் இன்று நடைபெற்று வரும் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவுக்காக அ.தி.மு.க தொண்டர்கள் கடந்த இருவார காலமாக சாலைகள் மற்றும் நடைபாதைகளை ஆக்கிரமித்து பிளக்ஸ் பேனர்கள் அமைக்கும் பணியில் ஈடுபட்டனர். 



உயிருடன் இருப்பவர்களுக்கு பிளக்ஸ் பேனர்கள் வைக்க கூடாது என்ற உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் கடந்த சில வாரங்களுக்கு முன் பிறப்பித்தது. ஆனால், அ.தி.மு.க தொண்டர்களால் நீதிமன்ற உத்தரவு காற்றில் பறக்கவிடப்பட்டுள்ளது.

கோவை விமான நிலைய முகப்பு பகுதியில் அக்கட்சியினர் ஒரு பிளக்ஸ் போர்டு அமைத்துள்ளனர். அதில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் புகைப்படம் உட்பட எம்.எல்.ஏ.க்கள் மற்றும் அ.தி.மு.க. உறுப்பினர்களின் புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளது.



இது தொடர்பாக, 'ஆளுங்கட்சியினரே நீதிமன்றத்தின் உத்தரவை மதிக்காமல் செயல்படலாமா?' என்றும், 'நீதிமன்ற உத்தரவை மீறிய ஆளுங்கட்சியினர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும்' சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

Newsletter

Left Parties Stage Demonstration in Coimbatore Urging Rollback of Fuel and Commercial LPG Price Hike..!

Demanding an immediate rollback of the hike in petrol, diesel and commercial LPG cylinder prices, the CPI(M), CPI and CP...

பெட்ரோல், டீசல், சிலிண்டர் விலை உயர்வை திரும்பப் பெற கோரி கோவையில் இடதுசாரி கட்சிகள் ஆர்ப்பாட்டம்..!

பெட்ரோல், டீசல் மற்றும் வணிக பயன்பாட்டிற்கான எரிவாயு சிலிண்டர் விலை உயர்வை திரும்பப் பெற வலியுறுத்தி, கோவையில் மார்க்சிஸ...

புதிய தமிழக அரசுக்கு வாழ்த்து தெரிவித்த கோவை மண்டல திருக்கோவில்கள் பரம்பரை அறங்காவலர்கள் சங்கம்..!

புதியதாக பொறுப்பேற்றுள்ள தமிழக முதல்வர் ஜோசப் விஜய் தலைமையிலான அரசுக்கு கோவை மண்டல திருக்கோவில்கள் பரம்பரை அறங்காவலர்கள்...

SSLC தேர்வு முடிவுகள் 2026: கொங்கு மண்டலத்தில் 97.09 சதவீதம் தேர்ச்சி விகிதத்துடன் கோவை முதலிடம்..!

தமிழகத்தில் நடைபெற்ற 2026 எஸ்.எஸ்.எல்.சி பொதுத்தேர்வு முடிவுகளில் புதுக்கோட்டை, சிவகங்கை, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்கள் மாந...

கோவையில் 1,500-க்கும் மேற்பட்ட மருந்தகங்கள் அடைப்பு; பொதுமக்கள் அவதி..!

ஆன்லைன் மருந்து விற்பனைக்கு தடை விதிக்க வேண்டும், கார்ப்பரேட் நிறுவனங்களின் தள்ளுபடி விற்பனையை கட்டுப்படுத்த வேண்டும் உள...

மீண்டும் இ-மெயில் மூலம் கலெக்டர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்..! – மர்ம நபரை பிடிக்க போலீசார் தீவிரம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மீண்டும் இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்ததை தொடர்ந்து, மெட்டல் டிடெக்டர் கருவ...