கோவையில் நாளை நடைபெற உள்ள எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா பாதுகாப்பு பணிகளுக்காக 8 மாவட்டங்களை சேர்ந்த 4 ஆயிரம் போலீசார் கோவை வந்தடைந்தனர்.
அ.தி.மு.க. சார்பில் நாளை வ.ஊ.சி மைதானத்தில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா கொண்டாடப்பட உள்ளது. இந்த நிகழ்ச்சியில் பல்வேறு நலத்திட்டங்களை வழங்க தமிழக முதலமைச்சர் பழனிச்சாமி மற்றும் அமைச்சர்கள் கலந்து கொள்கின்றனர்.
நிழகழ்ச்சிக்கான முன்னேற்பாடுகள் வ.ஊ.சி. மைதானத்தில் நடைபெற்று வருகின்றன. இந்த நிகழ்ச்சிக்காக போலீசார் பாதுக்கப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
பாதுகாப்பு பணிகளுக்காக கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு, சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி மற்றும் தர்மபுரி ஆகிய 8 மாவட்டங்களில் இருந்தும், கோவை மற்றும் திருப்பூர் ஆகிய மாநகரங்களில் இருந்தும் போலீசார் வரவழைக்கப்பட்டுள்ளனர். இது தவிர தமிழ்நாடு சிறப்பு காவல்படை, தமிழ்நாடு ஊர்காவல் படை, ஆயுதப்படை,ஆகிய துறைகளைச் சேர்ந்த போலீசாரும் இன்று கோவை வந்தடைந்தனர்.
நிகழ்ச்சி பாதுகாப்புக்காக 4 ஆயிரம் போலீசார் கோவை வந்துள்ள நிலையில் அவர்களை தங்க வைப்பதற்காக 20 தனியார் திருமணமண்டபங்களை போலீசார் வாடகைக்கு எடுத்துள்ளனர்.