கோவை, டிசம்பர் 2
கோவை வ.ஊ.சி. மைதானத்தில் நாளை எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா கொண்டாடப்பட உள்ளது. அ இ அ.தி.மு.க சார்பில் நடைபெற உள்ள இவ்விழாவில் தமிழக முதல் அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அமைச்சர்கள் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்க உள்ளனர்.
இந்த நிலையில், விழாவையொட்டி கோவை புற நகர பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக கோவை மாவட்ட போலீசார் வெளிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
1) கேரளா மாநிலத்தில் இருந்து வரும் வாகனங்கள் வேலந்தாவலம், மலுமிச்சம்பட்டி மற்றும் செட்டிபாளையம் வழியாக பல்லடத்தை அடையவும்.
2) பொள்ளாச்சியில் இருந்து சேலம் செல்லும் வாகனங்கள் நெகமம் வழியாக பல்லடத்தை அடையவும்.
3) மேட்டுப்பாளையத்தில் இருந்து வரும் வாகனங்கள் அன்னூர் வழியாகச் செல்லவும்.
4)அவினாசி சாலை, திருச்சி சாலை, சத்தி சாலை மற்றும் பொள்ளாச்சி சாலை என மாநகர பகுதிகளுக்குள் செல்லும் சாலையில் செல்ல வேண்டிய வாகனங்கள் எல்&டி பைபாஸ் சாலையை பயன்படுத்தவும்.
இந்த போக்குவரத்து மாற்றம் காலை 6 மணி முதல் நிகழ்ச்சி முடிவடையும் வரை அமலில் இருக்கும். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டது.