டிசம்பர் 1
திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அடுத்து அமைந்துள்ளது திருமூர்த்தி அணை. 46.59/60 அடி நீர்மட்டம் உடைய இந்த அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் தற்போது பெய்து வரும் மழையினால் வினாடிக்கு 630 கன அடி நீர் வரப்பெறுகிறது.
இந்நிலையில், திருமூர்த்தி அணையிலிருந்து தண்ணீர் திறக்க முதலமைச்சர் எடப்பாடி திரு. கே. பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார். மேலும், வரும் 6-ம் தேதி முதல் 20 மி.கன அடிக்கு மிகாமல் தண்ணீர் திறக்கவும் அவர் உத்தரவிட்டுள்ளார்