ரோட்டரி கிளப் ஆஃப் கோயம்புத்தூர் சார்பில் அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு “சிறந்த ஆசிரியர்கள் விருது”

கோவை, டிசம்பர் 1

கோயம்புத்தூர் ரோட்டரி கிளப் சார்பில் ரோட்டரி கிராமப்புற கல்வி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், கோவை மாவட்டங்களில் உள்ள அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்களின் முயற்சிகளை அடையாளம் கண்டு அங்கீகரிக்கும் வகையில் “சிறந்த ஆசிரியர்கள் விருது” வழங்கப்பட்டது.இதில், 10 மற்றும் 12-ஆம் வகுப்பைச் சேர்ந்த மொத்தம் 25 ஆசிரியர்களுக்கு “சிறந்த ஆசிரியர்கள் விருது” வழங்கப்பட்டது.

“சிறந்த ஆசிரியர்கள் விருது” வழங்கும் விழா கோவை அவினாசி சாலையில் உள்ள சேம்பர் ஆஃப் காமர்ஸ் வளாகத்தில் நடைபெற்றது. விழாவில் சிறப்பு விருந்தினராக மேட்டுப்பாளையம், சச்சிதாந்த ஜோதி நிகேதன் சர்வதேசப் பள்ளியின் செயலாளர் கவிதாசன் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில், ஆசிரியர் என்பவர் மருத்துவர்களைப் போன்றவர்கள். மருத்துவர்கள் உடலில் உள்ள நோய்களை போக்குகிறார்கள். ஆசிரியர்கள் மாணவர்களிடம் உள்ள அறியாமை என்ற நோயை போக்குகிறார்கள்.



உலகத்திலேயே சிறந்த கல்வியை வழங்கும் நாடான பின்லாந்தில் உள்ள பள்ளிகளில் ஒரு வகுப்பிற்கு நான்கு வகுப்பறைகள் இருக்கும். அந்த நான்கிலும் ஒரே சமயத்தில் ஒரே பாடம் நடத்தப்படும். மாணவர்கள் தங்களுக்கு எந்த ஆசிரியரின் வகுப்பு பிடிக்கின்றதோ அந்த வகுப்பறையில் சென்று அமர்ந்து கொள்ளலாம். அங்கு நீதிபதிகளை விட ஆசிரியர்களுக்கு மதிப்பு அதிகம். இந்தியா ஒரு வளரும் நாடு. முப்பது ஆண்டு மாற்றம் இந்த மூன்று ஆண்டுகளிலேயே நடந்துள்ளது. உலகத்திலேயே அதிகப்படியான சிந்தனை நம்மிடம் உள்ளது' என்றார்.

இதனைத்தொடர்ந்து, ரோட்டரி கிளப் ஆஃப் கோயம்புத்தூர் தலைவர் சாண்டியாகோ ஜேசு பேசுகையில், அறிவியல், சமூக அறிவியல், கணிதம், ஆங்கிலம் மற்றும் தமிழ் போன்ற பாடங்களைக் கையாளும் உயர்நிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கு இந்த விருது வழங்கப்படுகிறது. ஒவ்வொரு பாடத்திலும் இரண்டு ஆசிரியர்கள் அடையாளம் காணப்பட்டு விருது வழங்கப்படுகிறது.



உயர்நிலைப்பள்ளிகளில் 12ஆம் வகுப்பிற்கு 15 முக்கிய பாடங்களைக் கையாளும் ஆசிரியர்கள் தங்கள் முயற்சிகளுக்காக அங்கீகரிக்கப்படுகிறார்கள்" என்றார்.

Newsletter

Left Parties Stage Demonstration in Coimbatore Urging Rollback of Fuel and Commercial LPG Price Hike..!

Demanding an immediate rollback of the hike in petrol, diesel and commercial LPG cylinder prices, the CPI(M), CPI and CP...

பெட்ரோல், டீசல், சிலிண்டர் விலை உயர்வை திரும்பப் பெற கோரி கோவையில் இடதுசாரி கட்சிகள் ஆர்ப்பாட்டம்..!

பெட்ரோல், டீசல் மற்றும் வணிக பயன்பாட்டிற்கான எரிவாயு சிலிண்டர் விலை உயர்வை திரும்பப் பெற வலியுறுத்தி, கோவையில் மார்க்சிஸ...

புதிய தமிழக அரசுக்கு வாழ்த்து தெரிவித்த கோவை மண்டல திருக்கோவில்கள் பரம்பரை அறங்காவலர்கள் சங்கம்..!

புதியதாக பொறுப்பேற்றுள்ள தமிழக முதல்வர் ஜோசப் விஜய் தலைமையிலான அரசுக்கு கோவை மண்டல திருக்கோவில்கள் பரம்பரை அறங்காவலர்கள்...

SSLC தேர்வு முடிவுகள் 2026: கொங்கு மண்டலத்தில் 97.09 சதவீதம் தேர்ச்சி விகிதத்துடன் கோவை முதலிடம்..!

தமிழகத்தில் நடைபெற்ற 2026 எஸ்.எஸ்.எல்.சி பொதுத்தேர்வு முடிவுகளில் புதுக்கோட்டை, சிவகங்கை, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்கள் மாந...

கோவையில் 1,500-க்கும் மேற்பட்ட மருந்தகங்கள் அடைப்பு; பொதுமக்கள் அவதி..!

ஆன்லைன் மருந்து விற்பனைக்கு தடை விதிக்க வேண்டும், கார்ப்பரேட் நிறுவனங்களின் தள்ளுபடி விற்பனையை கட்டுப்படுத்த வேண்டும் உள...

மீண்டும் இ-மெயில் மூலம் கலெக்டர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்..! – மர்ம நபரை பிடிக்க போலீசார் தீவிரம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மீண்டும் இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்ததை தொடர்ந்து, மெட்டல் டிடெக்டர் கருவ...