பத்மாவதி பட விவகாரம் : நாடாளுமன்றக் கூட்டுக் குழு முன்பு இயக்குநர் பன்சாலி ஆஜராகி விளக்கம்

நவம்பர் 30

சர்ச்சைக்குரிய பத்மாவதி பட விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றக் கூட்டுக் குழு முன்பு படத்தின் இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலி ஆஜராகி விளக்கம் அளித்தார். 

நாடு முழுவதும் சர்ச்சையை ஏற்படுத்திய பத்மாவதி என்ற திரைப்படத்தை பிரபல பாலிவுட் இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலி இயக்கியுள்ளார். ஷாகித் கபூர், ரன்வீர் சிங், தீபிகா படுகோனே உள்ளிட்டோர் நடிப்பில் ரூ.150 கோடி செலவில் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்தத் திரைப்படம் டிசம்பர் 1-ம் தேதி திரைக்கு வர இருந்தது. ஆனால், இப்படத்தில், ராஜஸ்தானின் ராஜபுத்ர சமூகத்தைச் சேர்ந்த ராணி பத்மினியின் வாழ்க்கை வரலாற்று உண்மையை மறைத்து தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன. ராஜபுத்ர சமூகத்தினர் போராட்டத்திலும் ஈடுபட்டனர். 

ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம், உத்தரப்பிரதேசம், குஜராத், பஞ்சாப் மாநில முதலமைச்சர்கள், பல மத்திய அமைச்சர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். தணிக்கை வாரியச் சான்றிதழ் கிடைக்காததால், படத்தின் வெளியீட்டைத் தயாரிப்பாளர்கள் ஒத்தி வைத்துள்ளனர்.

இந்த நிலையில், இந்தப் பட விவகாரம் நாடாளுமன்றத் தகவல் தொழில்நுட்பத்தின் நிலைக்குழுவின் பார்வைக்கு சென்றது. இதையடுத்து அனுராக் தாக்கூர் தலைமையிலான 30 எம்பிக்கள் கொண்ட நாடாளுமன்றக் குழுவினர் இயக்குநர் சய்சய்லீலா பன்சாலிக்கும், மத்திய திரைப்படத் தணிக்கை வாரியத்தின் தலைவர் பாரசூன் ஜோஷிக்கும் சம்மன் அனுப்பி ஆஜராக உத்தரவிட்டனர். இதையடுத்து, பன்சாலி, ஜோஷி, மற்றும் மத்திய அரசின் தகவல் மற்றம் ஒளிபரப்புத்துறை அமைச்சகத்தின் அதிகாரிகளும் இன்று ஆஜராகி விளக்கம் அளித்தனர். 

தொடர்ந்து விசாரணை நடப்பதால் நாளை (டிச.,1) திரைப்படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Newsletter

Left Parties Stage Demonstration in Coimbatore Urging Rollback of Fuel and Commercial LPG Price Hike..!

Demanding an immediate rollback of the hike in petrol, diesel and commercial LPG cylinder prices, the CPI(M), CPI and CP...

பெட்ரோல், டீசல், சிலிண்டர் விலை உயர்வை திரும்பப் பெற கோரி கோவையில் இடதுசாரி கட்சிகள் ஆர்ப்பாட்டம்..!

பெட்ரோல், டீசல் மற்றும் வணிக பயன்பாட்டிற்கான எரிவாயு சிலிண்டர் விலை உயர்வை திரும்பப் பெற வலியுறுத்தி, கோவையில் மார்க்சிஸ...

புதிய தமிழக அரசுக்கு வாழ்த்து தெரிவித்த கோவை மண்டல திருக்கோவில்கள் பரம்பரை அறங்காவலர்கள் சங்கம்..!

புதியதாக பொறுப்பேற்றுள்ள தமிழக முதல்வர் ஜோசப் விஜய் தலைமையிலான அரசுக்கு கோவை மண்டல திருக்கோவில்கள் பரம்பரை அறங்காவலர்கள்...

SSLC தேர்வு முடிவுகள் 2026: கொங்கு மண்டலத்தில் 97.09 சதவீதம் தேர்ச்சி விகிதத்துடன் கோவை முதலிடம்..!

தமிழகத்தில் நடைபெற்ற 2026 எஸ்.எஸ்.எல்.சி பொதுத்தேர்வு முடிவுகளில் புதுக்கோட்டை, சிவகங்கை, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்கள் மாந...

கோவையில் 1,500-க்கும் மேற்பட்ட மருந்தகங்கள் அடைப்பு; பொதுமக்கள் அவதி..!

ஆன்லைன் மருந்து விற்பனைக்கு தடை விதிக்க வேண்டும், கார்ப்பரேட் நிறுவனங்களின் தள்ளுபடி விற்பனையை கட்டுப்படுத்த வேண்டும் உள...

மீண்டும் இ-மெயில் மூலம் கலெக்டர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்..! – மர்ம நபரை பிடிக்க போலீசார் தீவிரம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மீண்டும் இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்ததை தொடர்ந்து, மெட்டல் டிடெக்டர் கருவ...