பேஸ்புக் ரத்த தானம்: 40 லட்சத்திற்கும் அதிகமான இந்தியர்கள் விருப்பம்

சமூக வலைத்தளங்களில் ஒன்றான பேஸ்புக் தளத்தில் சமீபத்தில் வழங்கப்பட்ட ரத்த தானம் அம்சத்திற்கு அதிகப்படியான இந்தியர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர். இதைத் தொடர்ந்து, இந்த அம்சம் மற்ற நாடுகளிலும் வழங்கப்பட இருக்கிறது.

இந்தியாவில் ரத்த தானம் செய்பவர்களுக்கு உதவியாய் இருக்கும் நோக்கில் இந்த அம்சம் முதற்கட்டமாக இந்திய வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்பட்டது. இந்தியாவில் இதுவரை சுமார் 40 லட்சத்திற்கும் அதிகமானோர் ரத்த தானம் செய்ய விருப்பம் தெரிவித்துள்ளனர். ரத்தம் தேவைப்படுவோருக்கு மட்டுமின்றி ரத்தம் வழங்குவோரை நிறுவனங்கள் தரப்பில் சுலபமாகத் தொடர்பு கொள்ள பேஸ்புக் டூல்கள் உதவியாய் இருக்கும் என சோஷியல் பிளட் நிறுவனத்தின் துணைத் தலைவர் நயோமி கிளெய்ட் தெரிவித்துள்ளார்.

மருத்துவமனைகள், ரத்த வங்கிகள் மற்றும் தொண்டு நிறுவனங்கள் பேஸ்புக்கில் ரத்த தானம் குறித்த நிகழ்வுகளை உருவாக்க முடியும். இதன்மூலம் ரத்த தானம் செய்ய விரும்புவோரை மிக எளிமையாகத் தொடர்பு கொள்ள முடியும். 

2018-ம் ஆண்டின் துவக்கத்தில் பேஸ்புக் ரத்த தான அம்சம் வங்கதேசத்திற்கும் வழங்கப்படும், இந்தியா போன்றே வங்கதேசத்திலும் வாராவாரம் ரத்த தானம் செய்வோர் தொடர்ந்து விருப்பம் தெரிவிப்பர் என கிளெய்ட் தெரிவித்தார். ரத்த தானம் மட்டுமின்றி பேஸ்புக் தளத்தைப் பயன்படுத்தி புதிய டூல் மற்றும் அம்சங்களைப் பயன்படுத்தி மற்றவர்களைப் பாதுகாப்பாக இருக்க உதவி செய்ய முடியும் என பேஸ்புக் தெரிவித்துள்ளது. 

பேஸ்புக்கில் புதிதாக மென்டார்ஷிப் கனெக்ஷன் புரோகிராம், புதிய நிதி திரட்டும் டூல், ரத்த தான நிகழ்வு மற்றும் தற்கொலை தடுப்பு நிகழ்வு சார்ந்த அம்சங்களை வழங்கப்பட இருப்பதாகச் சமீபத்தில் பேஸ்புக் நிறுவனர் மார்க் சூக்கர்பர்க் தெரிவித்துள்ளார்.

மென்டர்ஷிப் மற்றும் சப்போர்ட் அம்சம் மூலம் வழிகாட்டிகள் மற்றும் உதவி பெறுவோர் இணைந்து நேரடியாகத் தொடர்பு கொண்டு, தொண்டு நிறுவனங்களின் நிகழ்வுகளில் பங்கேற்க முடியும் என கிளெய்ட் தெரிவித்தார். பேஸ்புக்கில் மேற்கொள்ளப்படும் அனைத்து நிதியும், நேரடியாகச் சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு அனுப்பப்படும்.

Newsletter

கவுண்டம்பாளையத்தில் பெண்களிடம் ஆபாச சைகைகள் காட்டி அச்சுறுத்திய நபர் மீது கைது நடவடிக்கை

கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் பெண்களை குறிவைத்து அரை நிர்வாணமாக நின்று ஆபாச சைகைகள் காட்டி அச்சுறுத்திய 38 வயது நபரை போ...

ஆனைகட்டி அருகே உக்ரைன் சுற்றுலா பயணியை விரட்டிய காட்டு யானை

கோவை மாவட்டம் ஆனைகட்டி அருகே ஒற்றை காட்டு யானை விரட்டியதால் உயிர் தப்பிக்க ஓடிய உக்ரைன் நாட்டைச் சேர்ந்த சுற்றுலா பயணி ப...

அவிநாசி தனித்தொகுதி தவெக MLA கமலி அமைச்சராக பதவியேற்பு

திருப்பூர் மாவட்டம் அவிநாசி தனித்தொகுதி தமிழக வெற்றிக் கழக MLA கமலி, தவெக அரசின் இரண்டாம் கட்ட அமைச்சரவை விரிவாக்கத்தில்...

கோவை மாவட்டத்தை சேர்ந்த 2 தவெக MLA-க்களுக்கு அமைச்சரவை பதவி..!

கோவை வடக்கு மற்றும் கிணத்துக்கடவு தொகுதிகளை சேர்ந்த தவெக சட்டமன்ற உறுப்பினர்கள் சம்பத்குமார், விக்னேஷ் குமார் ஆகியோருக்க...

கோவையில் இன்று (21.05.2026) மாதாந்திர மின் பராமரிப்பு:  பல பகுதிகளில் மின் நிறுத்தம்

கோவை நகரில் மே 21, 2026 காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை ஐந்து துணை மின்நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும...

Left Parties Stage Demonstration in Coimbatore Urging Rollback of Fuel and Commercial LPG Price Hike..!

Demanding an immediate rollback of the hike in petrol, diesel and commercial LPG cylinder prices, the CPI(M), CPI and CP...