நவம்பர் 30
கோவையில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவுக்காக விதிகளை மீறி வைக்கப்பட்டப் பேனர்களை அகற்றச் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கோவையில் நடைபெற உள்ள எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, கோவை - அவினாசி சாலையில் அமைக்கப்பட்ட வளைவு நுழைவு வாயில் மீது மோதிய விபத்தில் ரகு என்ற வாலிபர் உயிரிழந்தார் என்று கூறப்படுகிறது. இது தொடர்பாக, திமுக எம்எல்ஏ கார்த்திக் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிபதிகள், ரகு மரணத்திற்கு அலங்கார வளைவுதான் காரணம் என்றாலும், மரண விசாரணைக்குள் செல்ல விரும்பவில்லை. சாலையை மறைத்து பேனர்களை வைக்க அதிகாரிகள் அனுமதித்தது எப்படி எனக் கேள்வி எழுப்பியதுடன், சாலையோரங்களில் இருக்கும் பேனர்களை அகற்ற வேண்டும். அனுமதி பெற்றிருந்தாலும், விதிகளை மீறி வைக்கப்பட்டிருந்தால்,அவற்றை அகற்ற வேண்டும் என உத்தரவிட்டனர்.