ஜல்லிக்கட்டு கலவரம் குறித்து அச்சமின்றி புகார் அளிக்கலாம்- விசாரணை ஆணைய தலைவர் பேட்டி

கோவை, நவம்பர் 28

ஜல்லிக்கட்டு கலவரம் குறித்து பொதுமக்கள் அச்சமின்றி புகார் அளிக்கலாம் என்று விசாரணை ஆணைய தலைவர் ஓய்வு பெற்ற நீதிபதி திரு. ராஜேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

ஜல்லிக்கட்டு கலவரம் தொடர்பான விசாரணை ஆணையத்தின் தலைவர் ராஜேஸ்வரன் இன்று கோவையில் பத்திரிகையாளர்களிடையே பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில், "இதுவரை கோவையில் 50 பேர் விசாரணை ஆணையத்திடம் பிரமாண வாக்குமூலம் அளித்துள்ளனர். இதில் 39 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. அவர்களிடம் வரும் 3 நாட்களுக்கு விசாரணை நடத்தப்படும்.

கலவரம் தொடர்பாக விசாரணை ஆணையம் முன்பு ஆஜராக பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை. விசாரணை ஆணையம் முன்பு ஆஜராகும் பொதுமக்களை காவல்துறையினர் அச்சுறுத்தக் கூடாது.காவல்துறையினர் மிரட்டினால் பயமின்றி விசாரணை ஆணையத்தில் புகார் அளிக்கலாம். தற்போது கலவரம் தொடர்பாக பொதுமக்களின் கருத்துக்கள் கேட்கப்பட்டு பின்னர் காவல்துறையினரிடம் விசாரணை மேற்கொள்ளப்படும். இதுவரை நடந்த விசாரணையில் காவல்துறைக்கு சாதகமாகவே வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது.

மேலும், ஆட்டோ மற்றும் குடிசைகளுக்கு காவல்துறையினர் தீ வைத்தது தொடர்பான வீடியோ தடயவியல் சோதனைக்கு அனுப்பத் தேவையில்லை. இது தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்படும்.

நிவாரணம் பெற்ற பாதிக்கப்பட்டவர்கள் விசாரணை ஆணையம் முன்பு ஆஜராவது குறைவாகவே உள்ளது. அடுத்த மாதம் மதுரையில் விசாரணை மேற்கொள்ளப்படும். மேலும், விசாரணைக் காலம் நீட்டிக்கப்படும்" எனத் தெரிவித்தார்.

Newsletter

Left Parties Stage Demonstration in Coimbatore Urging Rollback of Fuel and Commercial LPG Price Hike..!

Demanding an immediate rollback of the hike in petrol, diesel and commercial LPG cylinder prices, the CPI(M), CPI and CP...

பெட்ரோல், டீசல், சிலிண்டர் விலை உயர்வை திரும்பப் பெற கோரி கோவையில் இடதுசாரி கட்சிகள் ஆர்ப்பாட்டம்..!

பெட்ரோல், டீசல் மற்றும் வணிக பயன்பாட்டிற்கான எரிவாயு சிலிண்டர் விலை உயர்வை திரும்பப் பெற வலியுறுத்தி, கோவையில் மார்க்சிஸ...

புதிய தமிழக அரசுக்கு வாழ்த்து தெரிவித்த கோவை மண்டல திருக்கோவில்கள் பரம்பரை அறங்காவலர்கள் சங்கம்..!

புதியதாக பொறுப்பேற்றுள்ள தமிழக முதல்வர் ஜோசப் விஜய் தலைமையிலான அரசுக்கு கோவை மண்டல திருக்கோவில்கள் பரம்பரை அறங்காவலர்கள்...

SSLC தேர்வு முடிவுகள் 2026: கொங்கு மண்டலத்தில் 97.09 சதவீதம் தேர்ச்சி விகிதத்துடன் கோவை முதலிடம்..!

தமிழகத்தில் நடைபெற்ற 2026 எஸ்.எஸ்.எல்.சி பொதுத்தேர்வு முடிவுகளில் புதுக்கோட்டை, சிவகங்கை, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்கள் மாந...

கோவையில் 1,500-க்கும் மேற்பட்ட மருந்தகங்கள் அடைப்பு; பொதுமக்கள் அவதி..!

ஆன்லைன் மருந்து விற்பனைக்கு தடை விதிக்க வேண்டும், கார்ப்பரேட் நிறுவனங்களின் தள்ளுபடி விற்பனையை கட்டுப்படுத்த வேண்டும் உள...

மீண்டும் இ-மெயில் மூலம் கலெக்டர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்..! – மர்ம நபரை பிடிக்க போலீசார் தீவிரம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மீண்டும் இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்ததை தொடர்ந்து, மெட்டல் டிடெக்டர் கருவ...