தேர்வுகள் எழுதும் மாற்றுத்திறனாளிகள் மருத்துவ சான்று பெற சிறப்பு ஏற்பாடுகள்- ஆட்சியர் தகவல்

கோவை, நவம்பர் 23

தேர்வுகள் எழுதும் மாற்றுத்திறனாளிகள் மருத்துவ சான்று பெற சிறப்பு மருத்துவக் குழு கோவை இணை இயக்குநர் நலப்பணிகள் அலுவலக வளாகத்தில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் திரு. த.ந. ஹரிஹரன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-

பள்ளி மற்றும் கல்லூரிகளில் மாற்றுத் திறனாளிகள் தேர்வு எழுதுவதற்காக கால அவகாசம், ஒரு சில பாடங்களுக்கு விலக்கு அளித்தல் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு பதில் வேறு ஒருவர் தேர்வு எழுத அனுமதித்தல் போன்ற பல சலுகைகள் உள்ளன. உரிய மருத்துவரிடம் மருத்துவச் சான்று பெற்ற பின்னரே அத்தகைய சலுகைகளை வழங்க இயலும். தேர்வு காலங்களில் மேற்படி மருத்துவ சான்றை மாற்றுத் திறனாளிகள் எளிமையாக பெற்றிட சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

அதன்படி வருகின்ற 2017 நவம்பர் 29-ம் தேதியன்று காலை முற்பகலில் கோவை இணை இயக்குநர் நலப்பணிகள் எம்.சந்திரசேகரன் மேற்பார்வையில் சிறப்பு மருத்துவக் குழு கோவை இணை இயக்குநர் நலப்பணிகள் அலுவலக வளாகத்தில் நடைபெற உள்ளது.

இதில், மருத்துவ சான்று கோரும் அனைத்து மாற்றுத்திறனாளி மாணவர்களை மருத்துவர் பரிசோதித்து வழங்கும் சான்றிதழ்களை பெற்றுப் பயனடையலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Newsletter

Left Parties Stage Demonstration in Coimbatore Urging Rollback of Fuel and Commercial LPG Price Hike..!

Demanding an immediate rollback of the hike in petrol, diesel and commercial LPG cylinder prices, the CPI(M), CPI and CP...

பெட்ரோல், டீசல், சிலிண்டர் விலை உயர்வை திரும்பப் பெற கோரி கோவையில் இடதுசாரி கட்சிகள் ஆர்ப்பாட்டம்..!

பெட்ரோல், டீசல் மற்றும் வணிக பயன்பாட்டிற்கான எரிவாயு சிலிண்டர் விலை உயர்வை திரும்பப் பெற வலியுறுத்தி, கோவையில் மார்க்சிஸ...

புதிய தமிழக அரசுக்கு வாழ்த்து தெரிவித்த கோவை மண்டல திருக்கோவில்கள் பரம்பரை அறங்காவலர்கள் சங்கம்..!

புதியதாக பொறுப்பேற்றுள்ள தமிழக முதல்வர் ஜோசப் விஜய் தலைமையிலான அரசுக்கு கோவை மண்டல திருக்கோவில்கள் பரம்பரை அறங்காவலர்கள்...

SSLC தேர்வு முடிவுகள் 2026: கொங்கு மண்டலத்தில் 97.09 சதவீதம் தேர்ச்சி விகிதத்துடன் கோவை முதலிடம்..!

தமிழகத்தில் நடைபெற்ற 2026 எஸ்.எஸ்.எல்.சி பொதுத்தேர்வு முடிவுகளில் புதுக்கோட்டை, சிவகங்கை, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்கள் மாந...

கோவையில் 1,500-க்கும் மேற்பட்ட மருந்தகங்கள் அடைப்பு; பொதுமக்கள் அவதி..!

ஆன்லைன் மருந்து விற்பனைக்கு தடை விதிக்க வேண்டும், கார்ப்பரேட் நிறுவனங்களின் தள்ளுபடி விற்பனையை கட்டுப்படுத்த வேண்டும் உள...

மீண்டும் இ-மெயில் மூலம் கலெக்டர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்..! – மர்ம நபரை பிடிக்க போலீசார் தீவிரம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மீண்டும் இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்ததை தொடர்ந்து, மெட்டல் டிடெக்டர் கருவ...