கோவை, நவம்பர் 22
ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் சார்பில் பள்ளிக் குழந்தைகளுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம் நடத்தப்பட்டது.

கோவையில் செயல்பட்டு வரும் குறிப்பிட்ட 41 மாநகராட்சிப் பள்ளிகள் மற்றும் 8 அரசுப் பள்ளிகளைச் சேர்ந்த சுமார் 9,500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவகள் இந்த பயிற்சி முகாமில் கலந்து கொண்டனர். அவர்களுக்கு கோபத்தை எவ்வாறு கட்டுப்படுத்துவது, வெற்றிக்கான நடவடிக்கைகள், இலக்குகளை நிர்ணயம் செய்வது, நேரத்தை கடைபிடிப்பது, தூய்மையாக இருப்பது, பொழுதுபோக்குவது உள்ளிட்ட 20 திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள் அளிக்கப்பட்டன.

ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியைச் சேர்ந்த 152 ஆர்வலர்கள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டு, மாணவர்களுக்கு பயிற்சி அளித்தனர். இறுதியில் மாணவர்கள் தங்களை சுயமதிப்பூடு செய்வதற்காக சிறுகையேடு வழங்கப்பட்டது. பயனுள்ள இந்த பயிற்சி முகாமிற்கு பள்ளிகள் தரப்பில் இருந்து பெரும் வரவேற்பு அளிக்கப்பட்டது.