கோவை, நவம்பர் 22:
தமிழகக் கலை அறிவியல் மற்றும் மேலாண்மைக் கல்லூரிகளின் கழகம் சார்பில் உயர்கல்வியில் சிறந்து விளங்கியவர்களுக்கான விருது வழங்கும் விழா வரும் 25-ம் தேதி நடக்கிறது.
தமிழகத்தில் உள்ள கல்லூரிகளில் உயர்கல்வியில் சிறந்து விளங்கியவர்களுக்கு தமிழகக் கலை அறிவியல் மற்றும் மேலாண்மைக் கல்லூரிகளின் கழகத்தின் சார்பில் விருது வழங்கிக் கவுரவிக்கப்படுகிறது. உயர்கல்வியில் பெரும் பங்களிப்பை அளித்தவர்கள், சிறந்து விளங்கியவர்கள், சிறந்த ஆசிரியர்கள், சிறந்த தலைமையாசிரியர் உள்ளிட்டோருக்கு விருதுகள் வழங்கப்படுகின்றன.
வரும் 25-ம் தேதி ரேஸ் கோர்ஸ் சாலையில் உள்ள ஐடிசி வெல்கம் ஓட்டலில் நடைபெற உள்ள நிகழ்ச்சியில் இந்த விருது வழங்கப்படுகின்றது. இந்த நிகழ்ச்சியில், அரசு உயர்கல்வித்துறையின் செயலாளர் சுனில் பலிவால், பாரதியார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் கணபதி மற்றும் என்ஏஏசியின் வடக்கு பிராந்திய துணை ஆலோசகரும், ஒருங்கிணைப்பாளருமான பொன்முடிராஜ் ஆகியோர் கலந்து கொள்ள உள்ளனர்.
இதைத் தொடர்ந்து, அன்றைய தினம் மாநில அளவிலான கருத்தரங்கிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அடுத்த 3 ஆண்டுகளில் உயர்கல்வித்துறையில் உள்ள சவால்களை எதிர்கொள்வது குறித்து இந்தக் கருத்தரங்கில் எடுத்துரைக்கப்படுகிறது. இதில், கலந்து கொள்ள விரும்புபவர்கள் இன்று மாலைக்குள் முன்பதிவு செய்ய வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.