கோவை, நவம்பர் 21
கோவையில் சொத்துத் தகராறு காரணமாக அண்ணனை அரிவாளால் வெட்டிக் கொலை செய்த தம்பிக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
ஆனைமலை அருகே குப்புச்சிபுதூர் பகுதியில் சொத்துத் தகராறு காரணமாகக் கடந்த 2016-ம் ஆண்டு அண்ணன் ஜெகதீபன் ராம் என்பவரை அவரது தம்பி பாலகிருஷ்ணன் அரிவாளால் வெட்டிக் கொலை செய்தார். இது தொடர்பான வழக்கு கோவை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. பல்வேறுகட்ட விசாரணைகளுக்குப் பிறகு, இந்த வழக்கின் தீர்ப்பு இன்று வழங்கப்பட்டது. அண்ணனை கொலை செய்த வழக்கில் பாலகிருஷ்ணனுக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து கோவை முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி கிறிஸ்டோபர் தீர்ப்பு வழங்கினார்.