ரயில்வே மேம்பாலத்தில் சப்-வே அமைக்காததைக் கண்டித்து போராட்டம் நடத்தப்போவதாக பொதுமக்கள் அறிவிப்பு

கோவை, நவம்பர் 20: ரயில்வே மேம்பாலத்தில் சப்-வே அமைக்காத சேலம் ரயில்வே கோட்டத்தைக் கண்டித்து வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி போராட்டம் நடத்தப்போவதாக பீளமேடு பகுதி பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.



கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று பீளமேடு கன்ஸ்யூமர் வாய்ஸ் அமைப்பு, குடியிருப்பு சங்கம் மற்றும் பொதுமக்கள் சார்பில் மனு அளிக்கப்பட்டது. அந்த மனுவில், பீளமேடு ரயில்வே மேம்பால பணிகள் ஆமை வேகத்தில் நடை பெற்றுவந்தன . 2011-ஆம் ஆண்டு ரயில்வே போராட்டக் குழு அமைக்கப்பட்டு பல்வேறு போராட்டங்களுக்குப் பிறகு தமிழக அரசு சார்பில் ரூ. 30.50 கோடி நிதி ஒதுக்கப்பட்டு தற்போது ரயில்வே மேம்பால பணிகள் நிறைவடையும் நிலையில் உள்ளன . 

இதனிடையே, 2011-ம் ஆண்டு சேலம் ரயில்வே கோட்டம் காண்பித்த வரைபடத்தில் சப்-வே இடம் பெறும் என குறிப்பிட்டிருந்தது. ஆனால், அதற்கான பணிகள் துவக்கப்படாததால் குடியிருப்பு சங்கங்கள் மற்றும் பொதுமக்கள் சார்பில் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொள்ளப்பட்டது. இருப்பினும், தற்போது வரை அதற்கான பணிகள் துவங்கப்படாமல் உள்ளது.

எனவே, ரயில்வே மேம்பாலத்தில் சப்-வே அமைக்காத சேலம் ரயில்வே கோட்டத்தைக் கண்டித்து வரும் 28-ம் தேதியன்று வீடுகளில் கருப்புக் கொடி ஏற்றி போராட்டம் நடத்தத் திட்டமிட்டுள்ளோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

ஈமு கோழி மோசடி வழக்கு: இருவருக்கு தலா 10 ஆண்டு சிறை - கோவை டான்பிட் நீதிமன்றம் தீர்ப்பு.

ஈமு கோழி பண்ணை முதலீட்டு மோசடி வழக்கில் 115 பேரிடம் ரூ.2.37 கோடி மோசடி செய்ததாக குற்றம் நிரூபணமான நிலையில், இருவருக்கு த...

கோவையில் 1.03 லட்சம் தெருவிளக்குகள் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் உள்ள 1,03,755 தெருவிளக்குகளின் செயல்பாடு குறித்து சிறப்பு ஆய்வு மேற்க...

கல்வி உதவித்தொகை மோசடி: கோவை போலீஸ் எச்சரிக்கை

கல்வி உதவித்தொகை வழங்குவதாக கூறி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் வங்கி விவரங்கள், OTP எண்கள் மற்றும் முன்பணம் கேட்டு மோ...

கோவையில் கோவில் சிலை திருட்டில் ஈடுபட்ட நபரை கையும், களவுமாகப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைப்பு

கோவை பெரியநாயக்கன்பாளையம் மகாமாரியம்மன் கோவிலில் ரூ.50,000 மதிப்புள்ள வெண்கல விநாயகர் சிலையை திருடிச் செல்ல முயன்ற நபரை...

குறுந்தொழில்களின் வளர்ச்சிக்காக மானிய நிபந்தனைகளை பரிசீலிக்க அமைச்சர்களிடம் FOCIA மனு

கோவையில் குறுந்தொழில் முனைவோர் மானியம் பெறுவதில் உள்ள தடைகள் மற்றும் தொழில் அமைப்புகளின் பதிவு, புதுப்பிப்பு சிக்கல்களுக...

ஈரான்-இஸ்ரேல் போர் எதிரொலி: 70 டூ 50 டன் - கோவை–ஷார்ஜா சரக்கு கையாளுதலில் சரிவு..!

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக விமானங்கள் கூடுதல் எரிபொருளுடன் இயக்கப்படுவதால், கோவை–ஷார்ஜா விமானங்களில் சரக்கு ஏற்றும் திறன...