கோவை, நவம்பர். 17
கோவையில் ஏற்பட்ட தீவிபத்தில் நெடுஞ்சாலைத் துறைக்குச் சொந்தமான ஆவணங்கள் சேதமாகின.

திருச்சிசாலை ஹைவேஸ் காலனி பகுதியில் நெடுஞ்சாலைக்குச் சொந்தமான கட்டிடம் ஒன்று உள்ளது.
அந்த கட்டிடத்தின் ஒரு பகுதியில் நெடுஞ்சாலைத்துறைக்குச் சொந்தமான ஆவணங்கள் சிலவற்றை அதிகாரிகள் பாதுகாப்பாக வைத்திருந்தனர். இந்த நிலையில், இன்று இரவு 8:30 மணியளவில் அந்த கட்டிடத்தில் லேசான தீவிபத்து ஏற்பட்டது.
தீவிபத்து தொடர்பாக அப்பகுதி மக்கள் அளித்த புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற கோவை தெற்கு தீயணைப்பு படை வீரர்கள் துரிதமாக செயல்பட்டு தீயை அணைத்தனர்.

இது தொடர்பாக அதிகாரிகள் மற்றும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.