கோவை, நவம்பர். 17
பாதுகாப்பு நிறைந்த கோவை மத்திய சிறை வளாகத்தில் இன்று அதிகாலை 4 சந்தன மரங்கள் வெட்டப்பட்டு கடத்த முயற்சி நடந்துள்ளது.

கோவை மத்திய சிறை வளாகத்தில் சந்தனமரங்கள் வளர்க்கப்பட்டு வருகின்றன.
அங்கு உள்ள டி.ஐ.ஜி அலுவலகம் அருகே இருந்த சந்தன மரங்கள் சுமார 20 " சுற்றளவுக்கு வளர்ந்திருந்தன.
இந்த நிலையில், இன்று அதிகாலையில் சிறை வளாகத்திற்குள் புகுந்த மர்ம நபர்கள் சந்தன மரங்களை வெட்டினர்.

அதோடு, மரத்தை வெட்ட பயன்பட்ட ரம்பம், அரிவாள்,கடப்பாறை ஆகியவற்றை மர்ம நபர்கள் அதே இடத்தில் போட்டு விட்டு தப்பிச்சென்றுள்ளனர். .

இது தொடர்பாக, ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை மத்திய சிறையின் முதல் அடுக்கில் தமிழக போலீசார், இரண்டாம் அடுக்கில் மத்திய தொழில் பாதுகாப்பு படை, மூன்றாவதாக சிறை காவலர்கள் என 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

பாதுகாப்பு நிறைந்த மத்திய சிறை வளாகத்தில் சந்தன மரம் வெட்டப்பட்டு இருப்பதால், அதன் பாதுகாப்பு குறித்து கேள்விக்குறி எழுந்துள்ளது.