அன்னூர், நவம்பர் 17
கோவை மாவட்டம், அன்னூர் அடுத்த மசக்கவுண்டன் செட்டிபாளையம் பஞ்சாயத்து பொன்னேகவுண்டன் புதூரில் உள்ள அரசு மதுபானக்கடை மேற்பார்வையாளர் ரங்கசாமி இடமிருந்து 2, 76,420 ரூபாயை இருசக்கர வாகனத்தில் வந்த முகமூடி கொள்ளையர்கள் பறித்து சென்றனர்.
அன்னூர் அடுத்த செம்மானி செட்டிபாளையத்தைச் சார்ந்த வெள்ளிங்கிரி மகன் ரங்கசாமி(47), இவர் பொன்னேகவுண்டன் புதூரில் உள்ள அரசு மதுபானக்கடையில் மேற்பார்வையாளராக பனியாற்றி வருகிறார்.
இந்நிலையில் நேற்று இரவு 11.00 மணியளவில் கடை விற்பனையாளர் சம்பத் மற்றும் மேற்பார்வையாளர் ரங்கசாமி இருவரும் விற்பனையை முடித்துவிட்டு விற்பனையான பணம் ரூபாய் 2,76,420/- எடுத்து கொண்டு தன் இருசக்கர வாகனத்தில் மசக்கவுண்டன்செட்டிபாளையம் சென்று கொண்டிருக்கும் போது பின்னால் இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று முகமூடி அணிந்த நபர்கள் ரங்கசாமியின் இருசக்கர வாகனத்தின் மீது மோதி கீழே தள்ளிவிட்டு மதுபான விற்பனை பணத்தை பறித்து சென்றுவிட்டார்கள்.
இது சம்மந்தமாக அன்னூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.