கோவை, நவம்பர் 17
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா உயிரோடு இருந்திருந்தால், அவரே வியந்து போகும் அளவிற்கு சசிகலா குடும்பத்தினர் ஊழல் செய்து இருப்பதாகப் பா.ஜ.க மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்தார்.
கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில் டிடிவி தினகரன் போலி துணிச்சலுடன் இருக்கிறார். அவர்கள் மீது தப்பில்லை என்றால் எதற்காகப் பதற்றம் அடைய வேண்டும். தமிழகத்தில் அரசியல் தாண்டி தவறு செய்யும் அனைவர்களிடமும் வருமான வரி சோதனைகள் நடைபெற வேண்டும். என்று தெரிவித்தார், தமிழக ஆளுநரின் மேற்பார்வை தமிழகத்திற்கு ஒரு ஆரோக்கியமான நகர்வு. திட்டங்களை விரைவாக நிறைவேற்றுவதற்கு இந்த நடவடிக்கை உதவிகரமாக இருக்கும். எதிர்கட்சிகள் உண்மையாக இல்லாததால் ஆளுநர் ஆய்வை விமர்சிக்கின்றன. குடியரசுத் தலைவர் சட்ட விதிகளுக்கு உட்பட்டு இத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபட்டால் பிரதமர் மோடி ஏற்றுக்கொள்வார். இந்த ஆய்வை முதலமைச்சர் உட்பட அனைத்து அமைச்சர்களும் ஏற்றுக் கொண்டுள்ளனர். இந்த ஆய்வின் மூலம் மக்களுக்கு நல்லது நடக்கும். ஆளுநர் ஆர்.எஸ்.எஸ் பின்புலத்தில் இருந்து வந்தவர் அல்ல, காங்கிரஸில் இருந்து வந்தவர். ஆளுநர் நடவடிக்கை குறித்துக் கவலைப்பட வேண்டியவர்கள் கவலைப்படவில்லை. கவலைப்பட வேண்டாதவர்கள் இதைப் பற்றி கவலைப்படுகின்றனர்.
ஆளுநர் அனைத்து மாவட்டங்களும் செல்வது ஆரோக்கியமான நிகழ்வு. இது போன்ற நடவடிக்கைகளை ஆளுநர் நிறுத்தி கொள்ள வேண்டும் என ஸ்டாலின் கூறியதால் இதை நிறுத்திவிட முடியாது. நேர்மறையாகப் பா.ஜ.க தமிழகத்தில் கட்சியை பலப்படுத்தி வருகிறது. நிச்சயம் ஆட்சியைப் பிடிப்போம். ஆளுநரை வைத்து ஆள வேண்டிய அவசியம் இல்லை. கட்டுமான தொழில், விவசாயம் உள்ளிட்ட விசயங்களில் அத்தியாவசிய நடவடிக்கை எடுக்க மாநில அரசிடம் வலியுறுத்தியுள்ளோம்.
என்று அவர் கூறினார்.