கோவை, நவம்பர்.16
டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு வாலிபர் பலியான சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மரக்கடையை அடுத்த சந்திரன் வீதி பகுதியை சேர்ந்தவர் அபுபக்கர். இவரது மகன் இப்ராகிம் (32).
காய்ச்சல் காரணமாக இவர் கடந்த 10 நாட்களுக்கு முன் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
அங்கு தனி வார்டில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த நிலையில் நேற்று மாலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இப்ராகிம்-ஐ அவரது உறவினர்கள் தன்னிச்சையாக வீட்டுக்கு அழைத்துச் சென்றதாக கூறப்படுகிறது.
இந்த சூழலில், இன்று காலை அவருக்கு மயக்கம் ஏற்பட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த இப்ராகிம்-ன் குடும்பத்தார் அவரை ம மீண்டும் அதிகாலை 5 மணிக்கு கோவை அரசு மருத்துவமனைக்கு மீண்டு அழைத்து வந்தனர்.
அங்கு மருத்துவர்கள் சிகிச்சை அளிக்க தொடங்கிய சிறிது நேரத்திலே இப்ராகிம் உயிரிழந்தார்.
கோவையில் டெங்கு காய்ச்சலால் உயிரிழப்போர் எண்ணிக்கை சற்றே ஓய்ந்த நிலையில் தற்போது மீண்டும் ஒருவர் பலியாகியிருப்பது பொதுமக்களை அச்சத்திற்குள்ளாக்கியுள்ளது.