கோவை, நவம்பர் 16
பிஎஸ்ஜி தொழில்நுட்பக் கல்லூரியைச் சேர்ந்த என்சிசி மற்றும் என்எஸ்எஸ் மாணவர்களின் சார்பில் டெங்கு விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது.
இந்தப் பேரணியில் கல்லூரியின் முதல்வர் ஆர். ருத்ரமூர்த்தி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். பீளமேட்டின் முக்கிய பகுதிகளின் சாலைகள் வழியாக டெங்கு விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு பேரணி சென்றனர். இதில், கல்லூரியின் தலைவர் டாக்டர். நடராஜன், மேஜர் கண்ணன், 4-வது தமிழக பட்டாலியன் என்சிசியை சேர்ந்த அதிகாரிகள் மற்றும் என்சிசியைச் சேர்ந்த மாணவர்கள் உள்பட 500-க்கும் மேற்பட்டோர் இந்தப் பேரணியில் கலந்து கொண்டனர்.