ஜெயலலிதாவின் விருப்பப்படி அனைத்து மாவட்டங்களிலும் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா வெற்றிகரம்

கோவை, நவம்பர் 16: மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் விருப்பப்படி, எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா அனைத்து மாவட்டங்களிலும் அரசு சார்பாக சிறப்பாக நடத்தப்பட்டு வருவதாக ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்தார்.

கோவை வ.உ.சி மைதானத்தில் வரும் டிசம்பர் 3-ம் தேதி எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவானது கொண்டாடப்பட இருக்கின்றது. இந்த விழாவிற்கானகால்கோள் பூசையானது இன்று வ.உ.சி மைதானத்தில் நடைபெற்றது. இந்த விழாவில், மூத்த அமைச்சர்கள் செங்கோட்டையன், திண்டுக்கல் சீனிவாசன், எஸ்.பி.வேலுமணி, விஜயபாஸ்கர், தங்கமணி உள்ளிட்ட 7 அமைச்சர்கள் கலந்து கொண்டனர். இந்த விழாவில் மாவட்ட ஆட்சியர் மற்றும் மாநகராட்சி ஆணையர் உள்ளிட்ட அனைத்து துறை அதிகாரிகளும் கலந்து கொண்டனர். பூசைகள் செய்யப்பட்டு கால்கோள் ஊன்றப்பட்டது. 



இந்த நிகழ்ச்சிக்கு பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் வேலுமணி கூறுகையில்,முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா விருப்பப்படி எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா அனைத்து மாவட்டங்களிலும் அரசு சார்பாக சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது. பல கோரிக்கைகளை முதலமைச்சரிடம் கூறியிருக்கிறோம். கோவையில் நடைபெற உள்ள நூற்றாண்டு விழா நிகழ்ச்சியில் பல்வேறு நலத்திட்டங்கள் அறிவிக்கப்படும். கோவையில் நடக்கும் கூட்டம் அனைத்து மாவட்டங்களை விட சிறப்பாக இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.



தொடர்ந்து, பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் சி. மகேந்திரன், பொள்ளாச்சி - கோவை இடையே தேசிய நெடுஞ்சாலை அமைக்க வேண்டும் என்ற நீண்டகாலக் கோரிக்கை தற்போது நிறைவேற்றப்பட்டு வருகிறது. இந்தச் சாலையில் மூன்று மேம்பாலங்கள் அமைக்க கோரிக்கைகள் வந்துள்ளன. இதை மத்திய அரசிடம் தெரிவித்து பாலங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் பொள்ளாச்சி - கோவை இடையே 4 வழி சாலை அமைக்கப்பட்ட பின்னர் சுங்க சாவடி அமைக்க கூடாது. அப்படி சுங்க சாவடி அமைக்கப்பட்டால் பொதுமக்களுடன் இணைந்து போராட்டம் நடத்தப்படும். பொள்ளாசியில் இருந்து திண்டுக்கல் வரை 4 வழி சாலை முழுவதுமாக அமைக்கப்பட்ட பின்னர்தான் சுங்கசாவடி அமைக்கப்பட வேண்டும். ஆளுநர் ஆய்வினை ஊடகங்கள்தான் சர்ச்சை செய்கின்றன. என்றார். 

Newsletter

Irugur Minor Murder Case: Adi Dravidar and Tribal Welfare Commission Issues Notice, Seeks Thorough Investigation

The Adi Dravidar and Tribal Welfare Commission has taken suo motu cognisance of the murder of a Class 7 student in Irugu...

நீலாம்பூரில் சடலமாக மீட்கப்பட்ட தொழிலாளி; கொலை வழக்கில் ஒருவர் சரண்

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் அருகே ரத்தக் காயங்களுடன் ஆண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தில், நண்பர்களுடன் மது அருந்தி...

இருகூர் மாணவர் கொலை வழக்கு: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல ஆணையம் நோட்டீஸ்..!

கோவை இருகூரில் 7-ம் வகுப்பு மாணவர் ரித்தீஷ், சக மாணவர்களால் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்க...

கோயம்புத்தூரில் மே 22-ல் சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

கோயம்புத்தூர் மாவட்ட நிர்வாகம் மே 22-ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகா...

கோவையில் நீட் தேர்வுக்கு எதிராக இடதுசாரி மாணவர்-இளைஞர் அமைப்புகள் ஆர்ப்பாட்டம்

நீட் தேர்வு வினாத்தாள் கசிவை கண்டித்து, நீட் தேர்வை ரத்து செய்யவும், தேசிய தேர்வு முகமையை கலைக்கவும் வலியுறுத்தி கோவை ரய...

ஆனைமலை மாசாணியம்மன் கோயில் உண்டியல் காணிக்கை  ₹61.65 லட்சம்

ஆனைமலை அருள்மிகு மாசாணியம்மன் திருக்கோயிலில் உண்டியல் கணக்கிடப்பட்டதில் ரூ.61.65 லட்சம் காணிக்கையாக கிடைத்ததுடன், தங்கம்...