திவாகரன் மற்றும் விவேக், சகோதரி கிருஷ்ணபிரியாவுக்கு வருமான வரித்துறை நோட்டீஸ்

கோவை, நவம்பர் 14

சசிகலாவின் உறவினர்களான திவாகரன் மற்றும் விவேக், சகோதரி கிருஷ்ணபிரியா ஆகியோர் நேரில் ஆஜராக வேண்டும் என வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. 

சசிகலா உறவினர்கள் மற்றும் அவர்களுடன் தொடர்புடையவர்களின் இடங்களில் வருமான வரி அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டனர். கடந்த 5 நாட்களாக சென்னை, தஞ்சை, மன்னார்குடி, நாமக்கல், திருச்சி, கோவை, கோடநாடு உள்ளிட்ட இடங்களிலும் வெளிமாநிலங்களில் சில இடங்களிலும் சோதனை நடத்தப்பட்டது. 187 இடங்களில் 1,800-க்கும் அதிகமான அதிகாரிகள் நடத்திய இந்த சோதனையில் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள சொத்து ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. கணக்கில் வராத தங்கம் மற்றும் வைர நகைகளும் கண்டுபிடிக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பிறகு பல போலி நிறுவனங்களை தொடங்கி அவற்றில் கருப்பு பணத்தை முதலீடு செய்து இருப்பதும் தெரியவந்துள்ளது.

ஜாஸ் சினிமாஸ் நிர்வாகிகளை விசாரணைக்கு வருமாறு வருமான வரித்துறை அதிகாரிகள் சம்மன் அனுப்பி இருந்தனர். இதையடுத்து, வருமான வரித்துறை அதிகாரிகள் முன்பு ஜாஸ் சினிமாசின் மூன்று முக்கிய நிர்வாகிகள் இன்று ஆஜராகினர். அவர்களிடம் அதிகாரிகள் தனித்தனியாக விசாரணை நடத்தினர். 

இதைத் தொடர்ந்து, சசிகலாவின் சகோதரர் திவாகரன், இளவரசி மகள் கிருஷ்ணபிரியா ஆகியோரிடம் விசாரணை நடத்தப்பட உள்ளது. திவாகரனிடம் இன்று மாலை அல்லது நாளை (புதன்கிழமை) விசாரணை நடைபெறும் எனத் தெரிய வந்துள்ளது. சசிகலா குடும்பத்து உறவினர்களும் அடுத்தடுத்து விசாரணைக்கு வர உள்ளனர். இந்த நிலையில் திவாகரன் மற்றும் விவேக்கின் சகோதரி கிருஷ்ண பிரியா ஆகியோர் நேரில் ஆஜராகவும் தனித் தனியாக நோட்டீஸ் அனுப்பட்டு உள்ளது.

ஜெயா டி.வி முதன்மை செயல் அதிகாரி விவேக் நாளை மறுநாள் நேரில் ஆஜராக வருமான வரித் துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதேபோல, திவாகரன் திருச்சியிலும், விவேக், கிருஷ்ண பிரியா ஆகியோர் சென்னையிலும் ஆஜராக உத்தரவிடப்பட்டு உள்ளது.

Newsletter

Irugur Minor Murder Case: Adi Dravidar and Tribal Welfare Commission Issues Notice, Seeks Thorough Investigation

The Adi Dravidar and Tribal Welfare Commission has taken suo motu cognisance of the murder of a Class 7 student in Irugu...

நீலாம்பூரில் சடலமாக மீட்கப்பட்ட தொழிலாளி; கொலை வழக்கில் ஒருவர் சரண்

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் அருகே ரத்தக் காயங்களுடன் ஆண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தில், நண்பர்களுடன் மது அருந்தி...

இருகூர் மாணவர் கொலை வழக்கு: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல ஆணையம் நோட்டீஸ்..!

கோவை இருகூரில் 7-ம் வகுப்பு மாணவர் ரித்தீஷ், சக மாணவர்களால் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்க...

கோயம்புத்தூரில் மே 22-ல் சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

கோயம்புத்தூர் மாவட்ட நிர்வாகம் மே 22-ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகா...

கோவையில் நீட் தேர்வுக்கு எதிராக இடதுசாரி மாணவர்-இளைஞர் அமைப்புகள் ஆர்ப்பாட்டம்

நீட் தேர்வு வினாத்தாள் கசிவை கண்டித்து, நீட் தேர்வை ரத்து செய்யவும், தேசிய தேர்வு முகமையை கலைக்கவும் வலியுறுத்தி கோவை ரய...

ஆனைமலை மாசாணியம்மன் கோயில் உண்டியல் காணிக்கை  ₹61.65 லட்சம்

ஆனைமலை அருள்மிகு மாசாணியம்மன் திருக்கோயிலில் உண்டியல் கணக்கிடப்பட்டதில் ரூ.61.65 லட்சம் காணிக்கையாக கிடைத்ததுடன், தங்கம்...