மாநகராட்சி நிர்வாகத்திடம் புகார் அளிக்க பிரத்யேக செயலி அறிமுகம்


கோவை, நவம்பர் 10: கோவை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் ஒரு பகுதியாக மாநகராட்சி நிர்வாகம் சார்பில் பல்வேறு திட்டங்கள் அமல்படுத்தப்பட்டு வருகின்றன. அதன்படி, ஸ்மார்ட் ட்ரீ, சென்சார் குப்பைத் தொட்டிகள், சுற்றுச்சூழலை பாதிக்காத மக்கும் தன்மையுடைய பைகள் உள்ளிட்ட திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

அதனைத்தொடர்ந்து, தற்போது பொதுமக்கள் தங்களுடைய புகார்களை மாநகராட்சி நிர்வாகத்திடம் எளிதாகவும், விரைவாகவும் தெரிவிப்பதற்காக பிரத்யேக செயலியை CCMC Central (Citizens Grievance Redressal App) அறிமுகப்படுத்தியுள்ளது.



மாநகராட்சிக்கு உட்பட்ட அனைத்து வார்டுகளில் நிலவும் குடிநீர் விநியோகம், சுகாதாரம், கல்வி, நகரமைப்பு, வரி, தேர்தல், இ-சேவை மற்றும் இதர பிரச்சனைகள் பற்றிய புகார்களை இந்த செயலியின் மூலம் எளிதாக பதியலாம். 

குறிப்பாக, புகாரை பதியும்பொழுது அது தொடர்பான உண்மைத் தன்மையுடைய புகைப்படத்தையும் இணைத்து பதிய வேண்டும். மேலும், புகார் சம்பந்தப்பட்ட மண்டலம், வார்டு மற்றும் பாதிப்புகள் குறித்தும் இச்செயலியில் பதிய வேண்டும்.



புகார் அளித்துமுடித்த பின்பு அதற்கான பிரத்யேக எண் மனுதாரருக்கு வழங்கப்படுகிறது. மேலும், அந்த புகார் மீது நடவடிக்கை எடுக்கும் அலுவலர் குறித்த விபரங்களும் தெரிவிக்கப்படுகின்றன.

முன்னதாக, மாநகராட்சி குறித்த புகார்களை எந்த அலுவலரிடம் தெரிவிப்பது, அளித்த புகாரின் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா என மக்கள் மத்தியில் அறியாமையே நிலவி வந்தது. இந்நிலையில், மக்களின் அனைத்து சந்தேகங்களுக்கும் தீர்வு காணும் வகையிலும், புகாரின் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா என்ற தகவலையும் உள்ளடக்கி அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த செயலி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது.



மாநகராட்சியின் இந்த செயலியினை பதிவிறக்கம் செய்ய "https://goo.gl/TPagds"

Newsletter

Irugur Minor Murder Case: Adi Dravidar and Tribal Welfare Commission Issues Notice, Seeks Thorough Investigation

The Adi Dravidar and Tribal Welfare Commission has taken suo motu cognisance of the murder of a Class 7 student in Irugu...

நீலாம்பூரில் சடலமாக மீட்கப்பட்ட தொழிலாளி; கொலை வழக்கில் ஒருவர் சரண்

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் அருகே ரத்தக் காயங்களுடன் ஆண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தில், நண்பர்களுடன் மது அருந்தி...

இருகூர் மாணவர் கொலை வழக்கு: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல ஆணையம் நோட்டீஸ்..!

கோவை இருகூரில் 7-ம் வகுப்பு மாணவர் ரித்தீஷ், சக மாணவர்களால் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்க...

கோயம்புத்தூரில் மே 22-ல் சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

கோயம்புத்தூர் மாவட்ட நிர்வாகம் மே 22-ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகா...

கோவையில் நீட் தேர்வுக்கு எதிராக இடதுசாரி மாணவர்-இளைஞர் அமைப்புகள் ஆர்ப்பாட்டம்

நீட் தேர்வு வினாத்தாள் கசிவை கண்டித்து, நீட் தேர்வை ரத்து செய்யவும், தேசிய தேர்வு முகமையை கலைக்கவும் வலியுறுத்தி கோவை ரய...

ஆனைமலை மாசாணியம்மன் கோயில் உண்டியல் காணிக்கை  ₹61.65 லட்சம்

ஆனைமலை அருள்மிகு மாசாணியம்மன் திருக்கோயிலில் உண்டியல் கணக்கிடப்பட்டதில் ரூ.61.65 லட்சம் காணிக்கையாக கிடைத்ததுடன், தங்கம்...