கோவையிலும் அரங்கேரிய 'கிளீனிங் ப்ளாக் மணி அபரேசன்'


கோவை, நவம்பர் 9: வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று காலை முதல் 'கிளீனிங் பிளாக் மணி' என்ற பெயரில் அதிரடியாக சோதனை நடத்தி வருகின்றனர்.

இந்த வருமான வரிசோதனையில் சசிகலா மற்றும் தினகரன் தரப்பினர் குறிவைக்கப்பட்டனர். 

சசிகலா மற்றும் டிடிவி தினகரனின் உறவினர்கள், நண்பர்கள், ஆதரவாளர்கள் ஆகியோரது வீடுகள், அலுவலகங்கள் மற்றும் நிறுவனங்கள் என மொத்தம் 180-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடியாக புகுந்து சோதனை நடத்தியுள்ளனர். 

ஜெயா டிவி அலுவலகம் தொடங்கி சாதாரண அடிப்படை ஆதரவாளன் வீடுவரையில் நடத்தப்பட்ட இந்த திடீர் சோதனை வழக்கமான ஒன்று தான் என்றும், கருப்பு பணம் தொடர்பான புகாரை தொடர்ந்தே இந்த திடீர் சோதனை என்றும் வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். 

ஆனால், இந்த சோதனை முழுக்க முழுக்க அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக நடத்தப்பட்டது என்றும், சசிகலா தரப்பினரை முற்றிலுமாக முடக்கி வைக்க வருமான வரித்துறை என்ற ஆயுதத்தை மத்திய அரசு கையில் எடுத்துள்ளதாகவும் சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் சமூக ஊடகங்கள் வாயிலாக கருத்து தெரிவித்து வருகின்றனர். 

இந்த சூழலில் கோவை சுற்றுவட்டாரத்தில் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடத்தியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

கோவையை சேர்ந்த தொழிலதிபரான ஆறுமுகசாமி என்பவரது வீடு, அலுவலகம் மற்றும் நிறுவனங்கள் என மொத்தம் 8 இடங்களில் இன்று காலை புகுந்த அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.



மேலும், தொழிலதிபர் சஜீவன் என்பவருக்கு சொந்தமாக கோவை போத்தனூர் பர்னிச்சர் கடை மற்றும் குடோன் ஆகிய இரு இடங்களிலும் தீவிர சோதனை நடத்தினர்.



இதில் ஆறுமுகசாமி என்ற தொழிலதிபர் பள்ளி பொதுத்தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற்றும் மேற்படிப்பை தொடரமுடியாத மாணவ மாணவிகளுக்கு ஆண்டுதோறும் கல்வி உதவித்தொகை வழங்கி வருகிறார்.

கட்டுமான பொருட்கள், திரையரங்கம், பேப்பர்மில்ஸ் என்று பல தொழில்களில் கொடிகட்டுப்பறக்கும் இவருக்கு சசிகலா மற்றும் டிடிவி தினகரன் தரப்பினர் மிக நெருக்கம் என்று தெரிகிறது.

இதேபோல், சஜீவன் என்ற தொழிலதிபர் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொடநாடு பங்களாவில் உட்கட்டமைப்பு பணிகள் செய்தவர். பர்னிச்சர் தொழிலில் கால்பதித்த இவரும் சசி தரப்பின் ஆதரவளார் என்று கூறப்படுகிறது. 

கோவை பொறுத்தவரையில் இவர்கள் இருவருக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Newsletter

Irugur Minor Murder Case: Adi Dravidar and Tribal Welfare Commission Issues Notice, Seeks Thorough Investigation

The Adi Dravidar and Tribal Welfare Commission has taken suo motu cognisance of the murder of a Class 7 student in Irugu...

நீலாம்பூரில் சடலமாக மீட்கப்பட்ட தொழிலாளி; கொலை வழக்கில் ஒருவர் சரண்

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் அருகே ரத்தக் காயங்களுடன் ஆண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தில், நண்பர்களுடன் மது அருந்தி...

இருகூர் மாணவர் கொலை வழக்கு: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல ஆணையம் நோட்டீஸ்..!

கோவை இருகூரில் 7-ம் வகுப்பு மாணவர் ரித்தீஷ், சக மாணவர்களால் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்க...

கோயம்புத்தூரில் மே 22-ல் சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

கோயம்புத்தூர் மாவட்ட நிர்வாகம் மே 22-ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகா...

கோவையில் நீட் தேர்வுக்கு எதிராக இடதுசாரி மாணவர்-இளைஞர் அமைப்புகள் ஆர்ப்பாட்டம்

நீட் தேர்வு வினாத்தாள் கசிவை கண்டித்து, நீட் தேர்வை ரத்து செய்யவும், தேசிய தேர்வு முகமையை கலைக்கவும் வலியுறுத்தி கோவை ரய...

ஆனைமலை மாசாணியம்மன் கோயில் உண்டியல் காணிக்கை  ₹61.65 லட்சம்

ஆனைமலை அருள்மிகு மாசாணியம்மன் திருக்கோயிலில் உண்டியல் கணக்கிடப்பட்டதில் ரூ.61.65 லட்சம் காணிக்கையாக கிடைத்ததுடன், தங்கம்...