விமான நிலைய விரிவாக்கத்திற்கு நிலம் --- சந்தை மதிப்பை வழங்கக் கோரி மனு

கோவை, நவம்பர் 6: கோவை விமான நிலைய விரிவாக்கத்திற்கு சந்தை மதிப்புத் தொகையினை வழங்கக் கோரி சின்னியம்பாளையம் ஜி.கே.ஆர். நகர் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் இன்று  மனு அளித்தனர்.



அந்த மனுவில், கோவை விமான நிலைய விரிவாக்கத்திற்கு கடந்த 10 வருடங்களுக்கு மேலாக நில ஆர்ஜிதம் செய்ய உள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்து வருகிறது. ஆனால் ஏற்கனவே நில ஆர்ஜிதம் செய்யப்பட்ட நில உரிமையாளர்களுக்கு இதுவரை பணம் பட்டுவாடா செய்யப்படவில்லை.

இந்நிலையில் தற்போது, 600-க்கும் மேற்பட்ட குடியிருப்புகளும், 100-க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகளும் உள்ள பகுதியில் எந்த அறிவிப்பும் இன்றி நில எடுப்பு செய்வதற்கான பணிகளை விமான நிலைய நிர்வாகமும், மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டு வருகின்றன. மேலும், ஆர்ஜிதம் செய்யும் நிலத்திற்கு சதுர அடிக்கு 1500 ரூபாய் மட்டுமே வழங்க முடியும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

அந்த இடத்தின் சந்தை மதிப்பு 5000 முதல் 8000 ரூபாய் வரை உள்ள நிலையில் மாவட்ட நிர்வாகம் குறைந்த தொகை வழங்குவதாக அறிவித்துள்ளது முறையற்றது. மேலும், சில இடைத்தரகர்கள் மூலம் நிலத்தை கையகப்படுத்த மாவட்ட நிர்வாகம் முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது. 

எனவே, மாவட்ட ஆட்சியர் இதுகுறித்த உரிய நடவடிக்கை மேற்கொண்டு பொதுமக்களுடன் கலந்தாய்வுக் கூட்டம் நடத்தி பிரச்சனையை சுமூகமாக முடிக்க வேண்டும்.

இவ்வாறு அம்மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை போலீஸ் முயற்சி: கடந்த ஆண்டை விட 27 சதவீதம் குறைந்த சாலை விபத்துகள்

கோவை மாநகரில் விபத்து அதிகம் நிகழும் பகுதிகளில் அமைக்கப்பட்ட ஜிக்-ஜாக் தடுப்புகள் மூலம் சாலை விபத்து மரணங்கள் 27 சதவீதம்...

விதி மீறல்களில் ஈடுபட்டால் சட்ட நடவடிக்கை; டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஆனைமலை டிஎஸ்பி எச்சரிக்கை

ஒரே நபருக்கு அதிக அளவில் மதுபானங்கள் விற்பனை செய்தாலோ, கள்ளச்சந்தையில் மது விற்பனை நடைபெற்றாலோ, குண்டர் சட்டத்தின் கீழ்...

விபத்தில் உயிரிழந்த கோவை கல்லூரி மாணவரின் உடல் உறுப்புகள் தானம்; அரசு சார்பில் மரியாதை

விபத்தில் மூளைச்சாவு அடைந்த கோவை மாணவர் சங்கீதின் குடும்பத்தினர் உடல் உறுப்புகள் தானம் செய்த நிலையில், கோயம்புத்தூர் வடக...

ஜவுளித்துறை, சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தில் கொங்கு மண்டலத்திற்கு முக்கியத்துவம் அளிக்க கோரிக்கை

ஜவுளித்துறை மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தின் போது கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களுக்க...

குறு, சிறு தொழில் முனைவோரின் பிரச்சனைகள்; அமைச்சர் செங்கோட்டையனிடம் முன்வைத்த கூட்டமைப்பினர்

குறு, சிறு தொழில் முனைவோரின் மின் கட்டண உயர்வு, SGST பழைய கணக்கு சோதனை உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடு...

நீலாம்பூர் அச்சங்குளத்தில் 35 வயது வாலிபர் சடலமாக மீட்பு; போலீசார் தீவிர விசாரணை

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரத்தக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்...