இந்த வாரம் முதல் உயர்கல்வி குறித்த தகவல்கள் உடனுக்குடன் உங்கள் சிம்ப்ளிசிட்டியில்..

கோவை, நவம்பர் 6: கோவையில் நடக்கும் பல்வேறு முக்கிய செய்திகள் மற்றும் நிகழ்வுகளை உடனுக்குடன் வழங்கி வரும் சிம்ப்ளிசிட்டி செயலியில், தற்போது,  உயர்கல்வி தொடர்பான செய்திகளை வழங்க முடிவு செய்யப்பட்டு உள்ளது . இதற்கென ”EduCity” என்ற தனி பத்தி உருவாக்கப்பட்டுள்ளது. அதில்,  வாரந்தோறும் திங்கட்கிழமைகளில் உயர்கல்வி தொடர்பான செய்திகளை  தலைமையாசிரியர் மற்றும்  தலைமை நிரூபர் அமுதா கண்ணன் வழங்க இருக்கிறார்.   

கோவையின் பிரபல ஹிந்து நாளிதழின் முன்னாள் நிரூபராக பணியாற்றிய அவர், உயர்கல்விக் குறித்த தகவல்களை பல ஆண்டுகளாக வழங்கி வந்தார். தமிழகத்தில் உயர்கல்விக்கு பெயர்போன கோவையில், 7 பல்கலைக்கழகங்களும், ஏராளமான கல்லூரிகளும் செயல்பட்டு வருகின்றன  .  இதனால், உயர்கல்வியைப் பயில்வதற்கு அண்டை மாநிலங்களில் இருந்தும், ஏராளமானோர் கோவைக்கு வருகின்றனர். 

இந்த நிலையில், இம்மாதம் 13ம்  தேதி முதல்    நமது சிம்ப்ளிசிட்டி செயலியில்,  கல்வி நிறுவனங்கள் பற்றியும், அவற்றின் கொள்கைகள் குறித்தும் விரிவாக பதிவிடப்பட இருக்கிறது. இந்த நடவடிக்கை மாணவர்களுக்கும், கல்வி குறித்த நெறியாளர்களுக்கும் சிறப்பான ஒன்றாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Newsletter

Irugur Minor Murder Case: Adi Dravidar and Tribal Welfare Commission Issues Notice, Seeks Thorough Investigation

The Adi Dravidar and Tribal Welfare Commission has taken suo motu cognisance of the murder of a Class 7 student in Irugu...

நீலாம்பூரில் சடலமாக மீட்கப்பட்ட தொழிலாளி; கொலை வழக்கில் ஒருவர் சரண்

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் அருகே ரத்தக் காயங்களுடன் ஆண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தில், நண்பர்களுடன் மது அருந்தி...

இருகூர் மாணவர் கொலை வழக்கு: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல ஆணையம் நோட்டீஸ்..!

கோவை இருகூரில் 7-ம் வகுப்பு மாணவர் ரித்தீஷ், சக மாணவர்களால் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்க...

கோயம்புத்தூரில் மே 22-ல் சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

கோயம்புத்தூர் மாவட்ட நிர்வாகம் மே 22-ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகா...

கோவையில் நீட் தேர்வுக்கு எதிராக இடதுசாரி மாணவர்-இளைஞர் அமைப்புகள் ஆர்ப்பாட்டம்

நீட் தேர்வு வினாத்தாள் கசிவை கண்டித்து, நீட் தேர்வை ரத்து செய்யவும், தேசிய தேர்வு முகமையை கலைக்கவும் வலியுறுத்தி கோவை ரய...

ஆனைமலை மாசாணியம்மன் கோயில் உண்டியல் காணிக்கை  ₹61.65 லட்சம்

ஆனைமலை அருள்மிகு மாசாணியம்மன் திருக்கோயிலில் உண்டியல் கணக்கிடப்பட்டதில் ரூ.61.65 லட்சம் காணிக்கையாக கிடைத்ததுடன், தங்கம்...