"மூலிகைச் செடிகள் வளர்ப்பிற்கு வழங்கப்படும் நிதி முறையாக பயன்படுத்தப்படுகிறதா என கண்காணிக்க வேண்டும்"


கோவை, நவம்பர் 6: தமிழகத்தில் மூலிகை செடிகள் வளர்ப்பிற்கு வழங்கப்பட்டு வரும் நிதி முறையாக பயன்படுத்தப்படுகிறதா? என்பதை கண்டறிய தமிழக அரசு குழு அமைத்து கண்காணிக்க வேண்டும் என விவசாயி சங்கத்தினர் சார்பில் இன்று கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு ஒன்று அளிக்கப்பட்டது. 



 இதுகுறித்து அச்சங்கத்தின் மாவட்ட தலைவர் பழனிச்சாமி கூறியதாவது:-

"தமிழகத்தின் பாரம்பரிய மூலிகை செடிகளை பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதன் பயன்பாடுகள் மற்றும் நன்மைகள் குறித்து இளம் தலைமுறையினர் அறிந்து கொள்ளும் வகையில் அரசு விழிப்புணர்வு முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். வறட்சி காரணமாக தமிழகத்தில் அழிந்து வந்த பல மூலிகை செடிகள் தற்போதைய பருவ மழை காரணமாக துளிர் விட்டு வரும் இந்நிலையில் அவற்றை முறையாக பாதுகாத்து மக்கள் பயன்பாட்டிற்குக் கொண்டு வர அனைத்து முயற்சிகளையும் அரசு மேற்கொள்ள வேண்டும். 

மேலும், தமிழகத்தில் மூலிகை செடிகள் வளர்ப்பிற்கு வழங்கப்பட்டு வரும் நிதி முறையாக பயன்படுத்தப்படுகிறதா என்று கண்காணிக்க 'தனி குழு' ஒன்றை அமைக்க அரசு முன்வர வேண்டும்". 

முன்னதாக, மூலிகை செடிகளை ஏந்தியவாறு விவசாயி சங்கத்தினர் ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்ததால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

Newsletter

பீளமேடு வார்டு 27-ல் மரக்கிளை வெட்டு பணியும் தூய்மை ஆய்வும் - கவுன்சிலர் அம்பிகா தனபால்

கோவை சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் வாகனங்கள் செல்வதற்கு இடையூறாக உள்ள மரக்கிளைகளை வெட்டு...

கோவை மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை - ஆணையர்

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், பிறப்பு-இறப்பு சான்றிதழ் முதல் குடி...

அங்கலக்குறிச்சியில் மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நாளை நடைபெறுகிறது

அங்கலக்குறிச்சி கோட்ட அளவிலான மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நாளை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறுகிறது...

பரளிக்காடு சூழல் சுற்றுலா இன்று முதல் மீண்டும் தொடக்கம்

கோவை மாவட்டம் காரமடை வனச்சரகத்தில் உள்ள பில்லூர் அணையின் பரளிக்காடு சூழல் சுற்றுலா கனமழை எச்சரிக்கை காரணமாக ஒரு வாரமாக ந...

திருப்பூரில் குடியிருப்பு பகுதியில் பதுக்கி வைத்து குட்கா விற்பனை; 60 கிலோ பறிமுதல் – 2 வட மாநில இளைஞர்கள் கைது

திருப்பூர் நொச்சிபாளையம் பகுதியில் குடியிருப்பு பகுதியில் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்பட்ட 60 கிலோ குட்கா பொருட்களை போ...

திருப்பூரில் டியிருப்பு பகுதியில் பதுக்கி வைத்து குட்கா விற்பனை; 60 கிலோ பறிமுதல் – 2 வட மாநில இளைஞர்கள் கைது

திருப்பூர் நொச்சிபாளையம் பகுதியில் குடியிருப்பு வீட்டில் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்பட்ட 60 கிலோ குட்கா பொருட்களை போல...