திருப்பூரில் குடியிருப்பு பகுதியில் பதுக்கி வைத்து குட்கா விற்பனை; 60 கிலோ பறிமுதல் – 2 வட மாநில இளைஞர்கள் கைது

திருப்பூர் நொச்சிபாளையம் பகுதியில் குடியிருப்பு பகுதியில் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்பட்ட 60 கிலோ குட்கா பொருட்களை போலீசார் பறிமுதல் செய்து, பீகார் மற்றும் ஒடிசா மாநிலங்களைச் சேர்ந்த இரு இளைஞர்களை கைது செய்தனர்.


திருப்பூர்: திருப்பூர் மாநகர காவல் துணை ஆணையர் தீபா சத்யன் தலைமையில், வீரபாண்டி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட நொச்சிபாளையம் பிரிவு பகுதியில் போலீசார் தீவிர ரோந்து மற்றும் சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.



அப்போது கிடைத்த ரகசிய தகவலின் பேரில், அந்த பகுதியில் உள்ள ஒரு பெட்டிக்கடையில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்பனை செய்யப்படுவது கண்டறியப்பட்டது. இதையடுத்து கடையில் இருந்த பீகார் மாநிலத்தைச் சேர்ந்த அமுல் குமார் (23) என்பவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.



விசாரணையில், பெங்களூரில் இருந்து குட்கா பொருட்களை கடத்தி வந்து விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. மேலும், அருகிலுள்ள குடியிருப்பு பகுதியில் வட மாநில இளைஞர்கள் அதிகம் தங்கி வசிக்கும் ‘லைன் வீடு’ ஒன்றில் குட்கா பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.

உடனடியாக அங்கு சென்ற போலீசார் சோதனை நடத்தியதில் சுமார் 60 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த தானேஸ்வரன் (27) என்பவரும் குட்கா விற்பனையில் ஈடுபட்டிருந்தது தெரியவந்தது.

இதையடுத்து இருவரையும் கைது செய்த போலீசார், குட்கா பொருட்கள் எங்கிருந்து கொண்டு வரப்பட்டன, மேலும் யாரெல்லாம் இதில் தொடர்புடையவர்கள் என்பதுகுறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

அமராவதி 42 அடி, திருமூர்த்தி 35 அடி: இன்றைய அணை நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை வரத்தால் 42.03 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்டம்...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளுக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து...

வீ த லீடர்ஸ் சார்பில் போதை ஒழிப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வுக்காக டர்ஃப் கிரிக்கெட் போட்டி

வீ த லீடர்ஸ் பெரியநாயக்கன்பாளையம் மேற்கு ஒன்றியம் சார்பாக போதைப் பொருள் ஒழிப்பு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்ப...

Tourist Entry Restricted due to flooding in Athirappilly Waterfalls for the third consecutive day

Continuous heavy rainfall over the Western Ghats has left the Athirappilly Waterfalls in spate for the third consecutive...

வெள்ளலூரில் ரூ.46 இலட்சம் செலவில் வீடில்லா நாய்களுக்கான கருத்தடை மையம்: மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் Katta Ravi Teja IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு வளாகத்தில் 15வது மத்திய நிதிக்குழு மானிய...

கோவை பிஎஸ்என்எல் அலுவலகத்தில் விழுந்த மயில் குஞ்சை தீயணைப்பு துறையினர் மீட்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள BSNL அலுவலக கட்டிட ஜன்னல் இடுக்கில் இருந்து கீழே விழுந்த மயில் குஞ்சை தீயணைப்...