கல்லூரி அருகே கஞ்சா விற்பனை செய்த வாலிபருக்கு தர்ம அடி கொடுத்த பொதுமக்கள்

கோவை, நவம்பர் 4:  கோவையில் கல்லூரி அருகே கஞ்சா விற்பனை செய்த வாலிபருக்கு தர்ம அடி கொடுத்த பொதுமக்கள் அவரை போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

துடியலூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பல்வேறு கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றனர். இந்த கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்கு சிலர் கஞ்சா விநியோகித்து செய்து வருவதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டி வந்தனர்.

இந்த நிலையில், நேற்று முன் தினம் துடியலூரை அடுத்த அசோகபுரம் பகுதியில் வாலிபர் ஒருவர் சந்தேகத்துக்கு இடமாக சுற்றிதிரிந்தார். இதனை கவனித்த அப்பகுதி மக்கள் அவரிடம் பேச்சுக்கொடுத்தனர்.

அப்போது அந்த வாலிபர் கஞ்சா விற்பனை செய்பவர் என்பது தெரியவந்தது.

இதனால் ஆத்திரமடைத்த பொதுமக்கள் அந்த வாலிபரை சரமாரியாக தாக்கினர். அதோடு அவரை துடியலூர் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.



பிடிபட்ட வாலிபரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் அவர், கவுண்டம்பாளையம் பகுதியை சேர்ந்த தாஜ்மலூஷன் என்பரது மகன் நீகல்(20) என்பதும். கல்லூரிகள் இருக்கும் பகுதிகளில் கஞ்சா விற்பனை செய்வதும் தெரியவந்தது.

இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் நீகல்-ஐ கைது செய்து சிறையிலடைத்தனர்.

இந்த சூழலில், வாலிபரை பொதுமக்கள் தாக்குவது போன்ற வீடியோ ஒன்று வெளியானது. இதில் அந்த வாலிபரை தாக்கிய 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Newsletter

Irugur Minor Murder Case: Adi Dravidar and Tribal Welfare Commission Issues Notice, Seeks Thorough Investigation

The Adi Dravidar and Tribal Welfare Commission has taken suo motu cognisance of the murder of a Class 7 student in Irugu...

நீலாம்பூரில் சடலமாக மீட்கப்பட்ட தொழிலாளி; கொலை வழக்கில் ஒருவர் சரண்

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் அருகே ரத்தக் காயங்களுடன் ஆண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தில், நண்பர்களுடன் மது அருந்தி...

இருகூர் மாணவர் கொலை வழக்கு: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல ஆணையம் நோட்டீஸ்..!

கோவை இருகூரில் 7-ம் வகுப்பு மாணவர் ரித்தீஷ், சக மாணவர்களால் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்க...

கோயம்புத்தூரில் மே 22-ல் சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

கோயம்புத்தூர் மாவட்ட நிர்வாகம் மே 22-ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகா...

கோவையில் நீட் தேர்வுக்கு எதிராக இடதுசாரி மாணவர்-இளைஞர் அமைப்புகள் ஆர்ப்பாட்டம்

நீட் தேர்வு வினாத்தாள் கசிவை கண்டித்து, நீட் தேர்வை ரத்து செய்யவும், தேசிய தேர்வு முகமையை கலைக்கவும் வலியுறுத்தி கோவை ரய...

ஆனைமலை மாசாணியம்மன் கோயில் உண்டியல் காணிக்கை  ₹61.65 லட்சம்

ஆனைமலை அருள்மிகு மாசாணியம்மன் திருக்கோயிலில் உண்டியல் கணக்கிடப்பட்டதில் ரூ.61.65 லட்சம் காணிக்கையாக கிடைத்ததுடன், தங்கம்...