டாஸ்மாக் கடைக்குள் ஊழியர் பிணம்

திருப்பூர், நவ.3; திருப்பூரில் பொதுமக்கள் எதிர்ப்பை மீறி திறக்கப்படட மதுபானக்கடைக்குள் கடை திறந்த அடுத்த நாளே டாஸ்மாக் ஊழியர் மர்மமான முறையில் மரணம் அடைந்த குறித்து போலீசார் தீவிர விசாரணை.

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த மங்களம் காவல் எல்லைக்கு உட்பட்ட பள்ளபாளையம் பகுதியில் செயல்பட்டு வந்த டாஸ்மாக் கடை அப்பகுதி கிராம பொதுமக்கள் எதிப்பு காரணமாக அங்கிருந்து அகற்றப்பட்ட்து. 

அதன் பின்னர் காளிபாளையம் பகுதியில் இதே கடையை திறக்க முற்பட்டதற்கு பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவிக்கவே அங்கிருந்து கடை அகற்றப்பட்டது . 

இதனிடையே டாஸ்மாக்கை, நிர்வாகம் கோம்பக்காட்டை அடுத்த தேவராயம்பாக்களையம் பகுதியில் சதீஸ் என்பவருக்கு சொந்தமான இடத்தில் புதியதாக கடை அமைக்கும் பணிகளை ஆரம்பித்தது . 

இதற்கும் அப்பகுதி பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில் நேற்று இதே பகுதியில் கடை திறக்கப்பட்டது. 

இந்த கடையில் ஊழியர்களாக ஈரோடு மாவட்டம் முத்தம்பாளையம் பகுதியை சேர்ந்த தவசியப்பன் மற்றும் தண்டபாணி, ஆரோக்கியசாமி ஆகியோர் விற்பனையில் ஈடுபட்டுவந்துள்ளனர். 

இந்நிலையில் நேற்று இரவு வழக்கம் போல் இரவு 10 மணிக்கு கடையை அடைத்து விட்டு கடைக்குள் தவசியப்பனும், கடைக்கு வெளியே கடையின் ஊழியர் ஆரோக்கியசாமி மற்றும் வெளியாட்கள் 2 பேர் என தங்கியுள்ளனர். இதனிடையே காலை வழக்கம்போல் கடையை தட்டி தவசியப்பனை எழுப்ப ஆரோக்கியசாமி முயன்றுள்ளார். இருப்பினும் எந்த பதிலும் உள்ளே இருந்து வராததை அடுத்து கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது கடைக்குள் தவசியப்பன் இறந்து கிடந்துள்ளார்.



இதனை கண்டு அதிர்சசி அடைந்த ஊழியர் ஆரோக்கியசாமி இது குறித்து மங்களம் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தார். தகவலை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் தவசியப்பனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

மேலும் சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

டாஸ்மாக் கடை பொதுமக்கள் எதிர்ப்பை மீறி திறக்கப்பட்டு ஒரே நாள் ஆன நிலையில் டாஸ்மாக்கை ஊழியர் மர்மமான முறையில் கடைக்குள் இருந்து பிணமாக மீட்கப்படட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவை போலீஸ் முயற்சி: கடந்த ஆண்டை விட 27 சதவீதம் குறைந்த சாலை விபத்துகள்

கோவை மாநகரில் விபத்து அதிகம் நிகழும் பகுதிகளில் அமைக்கப்பட்ட ஜிக்-ஜாக் தடுப்புகள் மூலம் சாலை விபத்து மரணங்கள் 27 சதவீதம்...

விதி மீறல்களில் ஈடுபட்டால் சட்ட நடவடிக்கை; டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஆனைமலை டிஎஸ்பி எச்சரிக்கை

ஒரே நபருக்கு அதிக அளவில் மதுபானங்கள் விற்பனை செய்தாலோ, கள்ளச்சந்தையில் மது விற்பனை நடைபெற்றாலோ, குண்டர் சட்டத்தின் கீழ்...

விபத்தில் உயிரிழந்த கோவை கல்லூரி மாணவரின் உடல் உறுப்புகள் தானம்; அரசு சார்பில் மரியாதை

விபத்தில் மூளைச்சாவு அடைந்த கோவை மாணவர் சங்கீதின் குடும்பத்தினர் உடல் உறுப்புகள் தானம் செய்த நிலையில், கோயம்புத்தூர் வடக...

ஜவுளித்துறை, சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தில் கொங்கு மண்டலத்திற்கு முக்கியத்துவம் அளிக்க கோரிக்கை

ஜவுளித்துறை மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தின் போது கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களுக்க...

குறு, சிறு தொழில் முனைவோரின் பிரச்சனைகள்; அமைச்சர் செங்கோட்டையனிடம் முன்வைத்த கூட்டமைப்பினர்

குறு, சிறு தொழில் முனைவோரின் மின் கட்டண உயர்வு, SGST பழைய கணக்கு சோதனை உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடு...

நீலாம்பூர் அச்சங்குளத்தில் 35 வயது வாலிபர் சடலமாக மீட்பு; போலீசார் தீவிர விசாரணை

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரத்தக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்...