"சென்னையில் மழை வெள்ளத்தை எதிர்கொள்ள தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளவில்லை"

கோவை, நவம்பர் 3: சென்னையில் மழை வெள்ளத்தை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கையை தமிழக அரசு மேற்கொள்ளவில்லை எனவும், இரட்டை இலை சின்னத்தை பெறுவதில் மட்டுமே தமிழக அமைச்சர்கள் அக்கறை செலுத்துவதால் மழை பாதிப்புகள் குறித்து கவலைப்படுவதில்லை எனவும் அதிமுக அம்மா அணியைச் சேர்ந்த புகழேந்தி குற்றம்சாட்டினார்.

அதிமுக அம்மா அணியின் துணை பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் ஆதரவாளர் புகழேந்தி இன்று கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

"இரட்டை இலை சின்னத்தை முடக்கியது துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தான். இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கில் தினகரன் தரப்பு காலதாமதம் செய்யவில்லை. இரட்டை இலை சின்னம் எங்களது அணிக்கே கிடைக்கும். 

பிரதமர் மோடி இருப்பதால் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அணிக்கு இரட்டை இலை சின்னம் கிடைக்கும் என்ற தனது கருத்து குறித்து அமைச்சர் ராஜேந்திரபாலாஜி விளக்கமளிக்க வேண்டும். உள்ளாட்சி மற்றும் சட்டமன்ற தேர்தலைச் சந்திக்க டிடிவி தினகரன் அணி தயாராக உள்ளது. ஆனால் தமிழக அரசு தேர்தலை சந்திக்க பயப்படுகிறது. ஒருவேளை இரட்டை இலை சின்னம் கிடைக்கவில்லை எனில் தொப்பி சின்னத்தில் போட்டியிட தயாராக உள்ளோம்.

சென்னையில் மழை வெள்ளத்தை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கையை அரசு மேற்கொள்ளவில்லை. இரட்டை இலை சின்னத்தை பெறுவதில் மட்டுமே தமிழக அமைச்சர்கள் அக்கறை செலுத்துவதால் மழை பாதிப்புகள் குறித்து கவலைப்படுவதில்லை.

திமுக தலைவர் கருணாநிதி ஒரு மணி நேரம் நல்ல நினைவாற்றல் பெற்றால் இந்த ஆட்சி கலைக்கப்படும். இந்த ஆட்சியின் நாட்கள் எண்ணப்படுகின்றன. திமுக-விற்கும், தினகரன் அணிக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பான நீதிபதி விசாரணையில் நம்பிக்கையில்லை என்பதால், சிபிஐ விசாரணை நடத்த வேண்டும்.

அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனுக்கு மோடியைப் பிடிக்காது. அவர் காங்கிரஸ் ஆதரவாளர் என்பதால் மன்மோகன்சிங் பிரதமராக இருப்பதாக நினைத்து பேசியுள்ளார்".

இவ்வாறு அவர் பேட்டியளித்தார்.

Newsletter

பீளமேடு வார்டு 27-ல் மரக்கிளை வெட்டு பணியும் தூய்மை ஆய்வும் - கவுன்சிலர் அம்பிகா தனபால்

கோவை சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் வாகனங்கள் செல்வதற்கு இடையூறாக உள்ள மரக்கிளைகளை வெட்டு...

கோவை மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை - ஆணையர்

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், பிறப்பு-இறப்பு சான்றிதழ் முதல் குடி...

அங்கலக்குறிச்சியில் மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நாளை நடைபெறுகிறது

அங்கலக்குறிச்சி கோட்ட அளவிலான மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நாளை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறுகிறது...

பரளிக்காடு சூழல் சுற்றுலா இன்று முதல் மீண்டும் தொடக்கம்

கோவை மாவட்டம் காரமடை வனச்சரகத்தில் உள்ள பில்லூர் அணையின் பரளிக்காடு சூழல் சுற்றுலா கனமழை எச்சரிக்கை காரணமாக ஒரு வாரமாக ந...

திருப்பூரில் குடியிருப்பு பகுதியில் பதுக்கி வைத்து குட்கா விற்பனை; 60 கிலோ பறிமுதல் – 2 வட மாநில இளைஞர்கள் கைது

திருப்பூர் நொச்சிபாளையம் பகுதியில் குடியிருப்பு பகுதியில் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்பட்ட 60 கிலோ குட்கா பொருட்களை போ...

திருப்பூரில் டியிருப்பு பகுதியில் பதுக்கி வைத்து குட்கா விற்பனை; 60 கிலோ பறிமுதல் – 2 வட மாநில இளைஞர்கள் கைது

திருப்பூர் நொச்சிபாளையம் பகுதியில் குடியிருப்பு வீட்டில் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்பட்ட 60 கிலோ குட்கா பொருட்களை போல...