உடையும் தருவாயில் முத்தண்ணன் குளம்

கோவை, நவம்பர் 3: கோவையில் அமைந்துள்ள முத்தண்ணன் குளம் தற்போது உடையும் தருவாயில் உள்ளதால் சுற்றுவட்டார பகுதி மக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.

முத்தண்ணன் குளம் என்றழைக்கப்படும் குமாரசாமி குளம் தடாகம் சாலை காந்திபார்க் அருகே அமைந்துள்ளது. சுமார் 190 ஏக்கர் பரப்பளவை கொண்ட இந்தக் குளத்தின் நீர்ப்பிடிப்பு பகுதியாக கிருஷ்ணம்பதி, கோளரம்பதி, நரசம்பதி உள்ளிட்ட குளங்கள் உள்ளன. இந்நிலையில், தற்போது முத்தண்ணன் குளத்தின் கரையோரப் பகுதியில் தடுப்புகள் சிதிலமடைந்து வருகிறது.



இதுகுறித்து உள்ளூர் மக்கள் கூறுகையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு குளத்தின் அருகாமையில் கட்டுமானப் பணிகள் நடைபெற்றது. அப்போது ஏற்பட்ட அதிர்வுகளின் காரணமாக குளக்கரையின் நிலை மோசமடைந்துவிட்டது. அதனைத்தொடர்ந்து, உடனடியாக வேலைகள் நிறுத்தப்பட்டு மணல் மூட்டைகளைக் கொண்டு குளக்கரைப் பகுதி தற்காலிகமாகச் சீரமைக்கப்பட்டது என்றனர்.



இந்தக் குளத்தின் அருகில் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதியில் 500-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ள நிலையில் குளத்தில் இருந்து நீர் வெளியேறினால் ஒட்டுமொத்த குடியிருப்பும் பாதிக்கும். மேலும், சாலைகளும் முற்றிலும் பாதிப்படையும். 

மேலும், கோவையில் அவ்வப்போது பெய்து வரும் மழையினால் நீர் வரத்து அதிகரித்து குளம் உடையும் பட்சத்தில் சென்னையில் ஏற்பட்டதைப் போன்றே இங்கேயும் பெரிய ஆபத்து ஏற்படும்.



"அருகிலுள்ள கட்டுமானப் பணிகளை தொடர்ந்தால் முத்தண்ணன் குளத்தின் கரைப் பகுதி மோசமாகிவிடும். இதனால் பேரழிவினை மக்கள் சந்திக்க வேண்டியிருக்கும்" என்கிறார் அப்பகுதியில் வசித்து வரும் ஒருவர்.



இதனிடையே, நிலைமைகளை மதிப்பிடுவதற்காகக் கோவை மாநகராட்சி அதிகாரிகள் குளக்கரையினை பரிசோதித்து வருகின்றனர். இதுகுறித்து மாநகராட்சியின் மூத்த அதிகாரி கூறுகையில், முத்தண்ணன் குளத்தில் சிதிலமடைந்த பகுதிகள் சீரமைக்கப்படும். அதன் முதற்கட்டமாக மணல் மூட்டைகளைக் கொண்டு தற்காலிக தடுப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன என்றார்.



Newsletter

கோவை போலீஸ் முயற்சி: கடந்த ஆண்டை விட 27 சதவீதம் குறைந்த சாலை விபத்துகள்

கோவை மாநகரில் விபத்து அதிகம் நிகழும் பகுதிகளில் அமைக்கப்பட்ட ஜிக்-ஜாக் தடுப்புகள் மூலம் சாலை விபத்து மரணங்கள் 27 சதவீதம்...

விதி மீறல்களில் ஈடுபட்டால் சட்ட நடவடிக்கை; டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஆனைமலை டிஎஸ்பி எச்சரிக்கை

ஒரே நபருக்கு அதிக அளவில் மதுபானங்கள் விற்பனை செய்தாலோ, கள்ளச்சந்தையில் மது விற்பனை நடைபெற்றாலோ, குண்டர் சட்டத்தின் கீழ்...

விபத்தில் உயிரிழந்த கோவை கல்லூரி மாணவரின் உடல் உறுப்புகள் தானம்; அரசு சார்பில் மரியாதை

விபத்தில் மூளைச்சாவு அடைந்த கோவை மாணவர் சங்கீதின் குடும்பத்தினர் உடல் உறுப்புகள் தானம் செய்த நிலையில், கோயம்புத்தூர் வடக...

ஜவுளித்துறை, சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தில் கொங்கு மண்டலத்திற்கு முக்கியத்துவம் அளிக்க கோரிக்கை

ஜவுளித்துறை மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தின் போது கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களுக்க...

குறு, சிறு தொழில் முனைவோரின் பிரச்சனைகள்; அமைச்சர் செங்கோட்டையனிடம் முன்வைத்த கூட்டமைப்பினர்

குறு, சிறு தொழில் முனைவோரின் மின் கட்டண உயர்வு, SGST பழைய கணக்கு சோதனை உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடு...

நீலாம்பூர் அச்சங்குளத்தில் 35 வயது வாலிபர் சடலமாக மீட்பு; போலீசார் தீவிர விசாரணை

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரத்தக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்...